முதல் நாள் காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி
நோக்கி சில கி.மீ தூரம் நடப்பது. அதாவது திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்வது. பிறகு
அங்கிருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் திரும்புவது.
இரண்டாம் நாள் காஞ்சிபுரத்திலிருந்து முதல்
நாள் விட்ட இடத்திற்கு காரில் செல்வது. பிறகு அங்கிருந்து மேலும் சில கி.மீ தூரம் திருப்பதி
நோக்கி நடப்பது. ஆக இரண்டு நாளில் திருப்பதி நோக்கி நடந்த தூரம் ஒரு சில கி.மீ.தான்
இங்கிருந்து மீண்டும் காஞ்சிபுரத்திற்கே காரில் திரும்புவது.
மூன்றாம் நாள் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டாம்
நாள் விட்ட இடத்திற்கு காரில் செல்வது. பிறகு அங்கிருந்து மேலும் சில கி.மீ தூரம் திருப்பதி
நோக்கி நடப்பது.. ஆக மூன்றாம் நாளில் நடந்த தூரம் மேலும் சில கி.மீ.தான் இங்கிருந்து
மீண்டும் காஞ்சிபுரத்திற்கே காரில் திரும்புவது.
இப்படி ஒரு வினோத பாத யாத்திரையை அதாவது ‘இன்கிரிமென்ட்டல்’
பாதயாத்திரையை காஞ்சி சங்கர மடத்து இளைய தளபதி சமீபத்தில் மேற்கொண்டுள்ளார். ஏன் இந்த
வினோத பாதயாத்திரை என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக தினமும் மடத்தில்
நடைபெறும் ஸ்ரீசந்திர மௌலீஸ்வர பூஜையில் பங்கேற்பதற்காக அவர் திரும்புவதாக கதை அளக்கிறார்கள்.
நல்லா இருக்குதுங்க.
ReplyDeleteமௌலீஸ்வர பூஜை முடிந்து பாதை யாத்திரை போனா திருப்பதி சாமி கோவிச்சுக்கும்.
ReplyDelete