கடந்த பத்து மாதங்களாக பத்திரிக்கை மற்றும்
தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை நாம் எதைப் பற்றி அதிமாகப் பேசிக்
கொண்டிருக்கிறோம்?
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பற்றிப்
பேசுகிறோமா?
நோக்கியா போன்ற ஆலைகள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார்களே! அது பற்றி பேசுகிறோமா?
ஆலை விபத்துகளால் ஆன்றாடம் பலியாகும் தொழிலாளர்கள் பற்றி பேசுகிறோமா?
படித்த இளைஞர்கள் வேலை தேடி அலையும் அவலம்
பற்றி பேசுகிறோமா?
பெருகி வரும் கல்விக் கட்டணங்கள் பற்றி பேசுகிறோமா?
அதிகரித்து வரும் நோய்கள் பற்றியோ அதற்கான
மருத்துவச் வசதிகள் மற்றும் செலவு குறித்தோ பேசுகிறோமா?
ஒருபக்கம் கடும் வறட்சி! குடிநீருக்கே மக்கள்
அல்லல்படும் துயரமான சூழலில். காலிக் குடங்களுடன் ஆங்காங்கே தாய்மார்களின் போராட்டம்
நடக்கிறதே! அதைப்பற்றி பேசுகிறோமா?
பருவம் தவறி பெய்த மழையால் வடஇந்திய மாநிலங்களில்
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து பேசுகிறோமா?
பெரும் கடன் சுமையில் சிக்கி மீளமுடியாமல்
தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி பேசுகிறோமா?
பருவ காலத்தில்கூட மழை பொய்த்து விடுகிறது.
ஆனால் தமிழக வீதிகளில் எப்பொழுதும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் சாராயம் பற்றியோ, இந்தச்
சாராயத்தால் அன்றாடம் தாய்மார்களின் தாலி அறுக்கப்படுவது பற்றியோ பேசுகிறோமா?
வாழ்வாதாரத்திக்காகப் போராடும் மக்கள் மீது ஏவப்படும் காவல்துறையின் அடக்குமுறைகள் பற்றி பேசுகிறோமா?
இப்படி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி பேசாமல்..........
கோட்சே பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்
பகவத் கீதையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்
சமஸ்கிருதம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்
மாட்டிறைச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
.
கிருஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி
பேசிக்கொண்டிருக்கிறோம்.
மசூதிகள் ஆன்மீகத் தலங்கள் இல்லை என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்துப் பெண்கள்
குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
தாலி பற்றியும் பூணூல் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
மக்களின் நலன் புறம்தள்ளப்பட்டு பார்ப்பனர்களின் நலனை மட்டும் முன்னெடுக்கும் தற்போதைய இந்துத்துவவாதிகளின் ஆட்சி தொடருகிறவரை நாம் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்போம்!
தேவையில்லாமல் இது போன்ற பிரச்சனைகள் கிளறி விடப்பட்டு வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவே தோன்றுகிறது.
ReplyDeleteஉண்மையிலேயே தாலியறுக்கும் நிகழ்வுகள் வெவ்வேறு வகையில் நடந்தேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வெறும் மஞ்சக்கயிற்றுக்கும், பூணூநூலுக்கும் நம் ஆற்றலை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோமே
ஆட்சியாளர்களுக்கு மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றி கவலை இல்லை. அவர்களின் கவலை எல்லாம் தங்களின் பார்ப்பனிய இந்தத்துவா கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதும் அதை உறுதிப்படுத்துவதும்தான். அதன் விளைவைத்தான் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
Deleteஇப்படியும் பேசுவார்கள் இராமன் ஆண்டால் என்ன..?? செருப்பு ஆண்டால் என்ன? வோட்டுக்கு எம்புட்டு துட்டு தருவாங்கே என்று..............
ReplyDeleteசரியாக சொன்னிங்க வலி போக்கன்
Deleteபார்பணிய ஆதிக்கம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில் அதே ஆதிக்கத்தை இந்துத்துவா பேரில் சில கயவர்கள் கொண்டுவந்து மீண்டும் தாங்கள் சுயமாக வாழமுயற்சிக்கிறார்கள் அதற்கு பல பகுத்தறிவு மொண்ணைகளும் உறுதுணை புரிங்கின்றன. அதனால்தான் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு போராடாமல் இப்படி தேவையில்லாதா பிரச்சனைகளை அலசி ஆராய்கிறார்கள்
ReplyDelete