”தாலி இல்லைன்னா ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கற்பு என்னாகுறது” என்று கேட்கிறீர்களே! மகாபாரதத்தில் துரௌபதி என்றொருத்தி இருப்பது தெரிந்துதான் கேட்கிறீர்களா?
கட்டிய புருஷனின் உயிருக்கு ஆதாரம் – தாலி. “விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி!” இதெல்லாம் தெரியாதா மாப்ள?
தாலி– இந்துக்களின் கலாச்சாரமா?- எனக்குத் தெரிந்து மனுதர்ம சட்டத்தில் தாலிகட்டுவது பற்றி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்து மதத்தின் அத்தாரிட்டி மனுவே தாலி பற்றி பேசாத போது நீங்க ஏய்யா முந்திரி கொட்டை மாதிரி?
தாலியை முதலில் அணிந்தது தேவரடியார்கள் எனில் தாலி தேவதாசிகளின் அடையாளமாகத்தானே இருக்க முடியும். அதே ஏன் நம் குலப்பெண்கள் சுமக்க வேண்டும்?
தாலி தமிழனின் பாரம்பரிய அடையாளம் எனில் கணவன் இறந்த பிறகு தாலி அறுக்கும் நிகழ்வு எந்த ஒரு பழந்தமிழ் இலக்கியத்திலும் ஏன் இடம் பெறவில்லை?
பல்லாண்டுகால தமிழனின் வரலாற்றில் எப்போதும் இல்லாது – இடையில் புகுந்த தாலியை பிடித்துத் தாங்கிக் கொண்டிருப்பது தமிழனின் அடையாளத்தையே அழிக்கும் கயமைத்தனம் அல்லவா?
தாலியைத் துறப்பதே தமிழனின் அடையாளம்!
நான் தமிழன். நீங்க?
வினவு தளத்தில் வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை என்கிற கட்டுரைக்கு நான் எழுதிய மறுமொழி இது. தாலி குறித்த பல புதிய தகவல்களைத் தருகிறது இக்கட்டுரை.
நான் தமிழன். நீங்க?
வினவு தளத்தில் வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை என்கிற கட்டுரைக்கு நான் எழுதிய மறுமொழி இது. தாலி குறித்த பல புதிய தகவல்களைத் தருகிறது இக்கட்டுரை.
No comments:
Post a Comment