Tuesday, October 13, 2015

மாட்டுக் கறி சாப்பிடாதவன் நல்ல இந்துவே அல்ல!

ஓரளவுக்காவது மார்க்சியக் கோட்பாடுளைத் தெரிந்திருந்தால்தான் மார்க்சியத்தை ஆதரிக்க முடியும். மார்க்சியக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவன் அக்கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவர தீவிரமாகப் போராடுவான். அதே போல நாத்திகக் கோட்பாடுகளையும் பெரியாரியலையும் தெரிந்தவன் மட்டுமே அதற்காகப் போராட முன்வருவான்.

ஆனால் இன்று இந்து மதக் கோட்பாடுகளை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ளதாக கூப்பாடு போடும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் போர்வையில் போராடும் நபர்களுக்கு உண்மையில் இந்து மதக்கோட்பாடு பற்றி எதுவும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொன்னப் போனால் அவர்கள் இந்து மதத்திற்கு எதிராகத்தான் போராடுகிறார்கள்.

இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உணவு பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது? இறைச்சி உணவை அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உணவை தடை செய்ய வேண்டும் என இவர்கள் கூப்பாடு போடுவதன் உள்நோக்கம் என்ன? இந்து மத சமய நூல்களை இவர்கள் என்றைக்காவது புரட்டி இருப்பார்களா? இவர்கள் உண்மையிலேயே பசுவைப் பாதுகாக்கத்தான் போராடுகிறார்களா? இல்லை மாட்டிறைச்சியை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்களா?

இந்து மதம் உள்ளிட்ட உலகில் உள்ள அனேக மதங்கள் மதப் புனிதத்தைப் போற்றிக்காக்க விலங்குகளை பலியிட்டுள்ளனர். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் உணவுக்காகவே விலங்குகள் பலியிடப்பட்டதற்கு மனுஸ்மிருதி, வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், தர்மசூத்திரங்கள் உள்ளிட்ட இந்து மத சமய நூல்கள்களே சான்றாக உள்ளன.

”சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல”. (மனு: 5-30)

“மதச் சடங்குகளில் முறையாக ஈடுபட்டுள்ள ஒருவன் இறைச்சி உண்ணவில்லை எனில், அவன் இறைச்சி உண்ணாத பாவத்திற்காக அடுத்து வரும் 21 பிறப்புகளிலும் பலியிடப்படுகிற விலங்காகவே பிறப்பான்”. (மனு: 5-35)

“நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான்” - சத்பத பிராமணத்தில் மகரிஷி யாக்யவல்கியன். (3/1/2/21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்” என்கிறது அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1/3/10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும் (10/85/13), பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான் (6/17/1) என்கிறது ரிக் வேதம்.

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான் என்கிறது வஷிஸ்த தர்ம சூத்திரம் (11/34).

இப்படி இறைச்சிக் கொழுப்பின், குறிப்பாக மாட்டிறைச்சிக் கொழுப்பின் வழவழப்பு புராணங்களின் பக்கங்களில் வழிந்தோடுகிறது.

புராணங்களில் வழிந்தோடும் இந்தக் கொழுப்பை தனது வாலால் வழித்து மறைக்கப் பார்க்கின்றன சங்பரிவார வானரங்கள்

காலம் கடந்து விட்டதால் இனி வானரங்கள் ஒரு போதும் மனிதனாக பரிணாம வளர்ச்சி பெறும் என எதிர்பார்ப்பது அறிவீனம். அதே வேளையில் ஒட்டு மொத்த மனிதர்களையும் வானரங்களாக மாற்ற முயல்வதை வேடிக்கை பார்ப்பது கோழைத்தனம்.

“பழைய இந்து சமய சடங்குகளின்படி மாட்டிறைச்சியை சாப்பிடாத ஒரு மனிதன் நல்ல இந்து அல்ல!” என்கிறார் சுவாமி விவேகானந்தர். (விவேகானந்தர் தொகுப்பு; பகுதி:3, பக்கம்: 536)

வெறும் இந்துவாக வாழ்வதை விட – நல்
இந்துவாக வாழ்வதே மேல்!.
------------
தொடர்புடைய பதிவுகள்:

ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?


4 comments:

 1. பசுவின் பிள்ளைகளே?
  கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவை
  ..
  ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீகாரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
  **************
  .
  பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?
  .
  பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.
  .
  மேலும் அறிய......கிளிக் செய்க... >>> இங்கே படித்து சிந்தியுங்கள் <<<

  ReplyDelete
  Replies
  1. தேவையான கருத்துக்களை பகிர்தமைக்கு நன்றி!

   Delete
 2. அப்போ..மாட்டுக்கறி சாப்பிடாத அவாள் எல்லாம் போலி சுதந்திரம் மாதிரி போலி இந்துக்கள்... என்பது புரிந்து விட்டது....

  ReplyDelete