மலக்குழியும் சந்திரயானும்!
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பொறியாளர்கள், அறிவியலாளர்களின் கூட்டு முயற்சியே சந்திரயான் வெற்றி. அணித்தலைவர் சிறப்பாக அமையும் பொழுது கூட்டுழைப்பு மேலும் பலப்படுகிறது. அனைவரையும் வாழ்த்துவோம்.
ஒரு பக்கம் மலக்குழியில் மனிதன், மறுபக்கம் நிலவில் சந்திரயான். இந்த முரணை வைத்து அறிவியல் சாதனையை கொச்சைப்படுத்துவது அழகல்ல.
அறிவியல் சாதனைகள் இல்லை என்றால் உலகையே உள்ளங்கையில் கொண்டு வந்து உங்களோடு உறவாட மூடியுமா?
மலக்குழியில் மனிதன் உள்ளிட்ட பிற அம்சங்களில் நவீனத்துவத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே அறிவுடைமை. வெற்றுப் புலம்பல்களால் மலக்குழியிலிருந்து மனிதனை மீட்க முடியாது.
நிலவிலும் சாதியா?
வாட்ஸ்அப் குழுக்களில் சந்திரயான் - 3 அணித்தலைவர் தங்கள் சாதி என உரிமை கொண்டாடி அறிவியலையே அசிங்கப்படுத்துகின்றனர் சில சாதி வெறியர்கள்.
அவர் யாரா இருந்தா என்ன? நாட்டுக்கு நல்லது நடந்ததா என்பதைத்தான் பார்க்க வேண்டும். எதற்கு இதில் சாதியக் கண்ணோட்டம்.
அவர் இன்ன சாதி என்பதனால் இந்த வாய்ப்பை அவர் பெறவில்லை. மாறாக, அவரது தகுதி திறமையை வைத்துதான் தீர்மானிப்பார்களே ஒழிய சாதியை வைத்து அல்ல.
அணித்தலைவர் தங்கள் சாதி என உரிமை கோரி, பெருமை பேசும் சாதி வெறியர்களே! தயவு செய்து சாதிய வெறியிலிருந்து வெளியே வாருங்கள். தகுதியை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறருக்கும் அவ்வாறு வழிகாட்டுவதுதான் அறிவுடைமை.
ஊரான்
மகேஷ்வரி: சாதியை வைத்து பிழைக்கும் ஓநாய் கூட்டம் என்றுமே திருந்தாது. திறமைசாலிகளுக்கு சாதி தேவைப்படுவதில்லை.
ReplyDeleteஞானி: சாதிக்கும் அறிவுக்கும் தொடர்பு கிடையாது என்று தாங்களே தங்கள் செயல் (பெருமிதப் படுதல்) மூலம் உறுதி படுத்துகிறார்கள்... படுத்துகிறார்கள் அறிவிலிகள்😖
ReplyDeleteரவிக்குமார் ப: மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளீர்கள். என்னுடைய எண்ணமும் அதுவே.
ReplyDeleteசாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடி ஒரு நூற்றாண்டு ஆகியும் சாதி எனும் சுழலில் இந்திய மக்கள் சிக்குண்டுதான் இருக்கின்றனர். இது அரசியல்வாதிகளுக்கு ஆதாயமாக இருப்பதால், உண்மையில் சாதியை / தீண்டாமையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே இன்றைய அவல நிலை. வருத்தத்திற்கு உரியது.
நல்ல வேளையாக எனது குழுக்களில் எந்த ஒரு இஸ்ரோ விஞ்ஞானியையும் சாதிய உரிமை கோரிய பதிவு வரவில்லை. வந்திருந்தால் எனக்கு பிளட் பிரஷர் எகிறி இருக்கும்.
சில்லறைத் தனமான அணுகுமுறை. 😡
வே.மணி: எனக்கும் எனது சொந்தக்காரர் பதிவு போட்டார்.
ReplyDeleteஎன்ன செய்வது, அறிவான கருத்துகளை தொடர்ந்து எழுதி வந்தால்தான் கொஞ்சம் பேராவது அறிவு கொள்வர்.
தங்கள் பதிவு தொடரட்டும். வாழ்த்துகள்.
மக்கள் தொகையில் பிராமணர் மூன்று சதவீதம்
ReplyDeleteஐஐடியில் என்பது சதவீதம் பிராமணர்கள்
மீடியாவில் தொன்னூறு சதவீதம் பிராமணர்கள் கையில்
நீதி துறையில் பெரும்பாலோனோர் பிராமணர்கள்
மாநில மற்றும் மத்திய செகிரெட்ரீட்டில் பெரும்பாலோனோர் பிராமணர்கள்
இந்தியாவை ஆள்வதே பிராமணர்கள்தான்
சாதியக் கண்ணோட்டம் கூடாதா ?
இஸ்ரோ தலைவனுக்கு வெளிநாட்டுக்கார்கள் ராக்கெட் டெக்னாலஜி வேதங்களிலிருந்து COPY அடிக்கப்பட்டதாம் .
இனிமேல் இவர்கள் விடும் ராக்கெட் மீன் பிடிக்கத்தான் போகுது
இவங்களுக்கு எதுக்கு ராக்கெட் யாகம் செஞ்சி மந்திரத்தால் பானங்கள் செய்யவேண்டியதுதானே