மக்களின் பிரச்சனைகளுக்காக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி, சிறை சென்று சித்திரவதைகளை அனுபவித்த ஒரு தியாகியைப் போல, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளை பூதாகரமாக ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள்.
ஆளும் கட்சியை, அதிலும் குறிப்பாக திமுக மற்றும் திராவிட
அரசியலை, சீமானைப் போலவே, மேடைகள் தோறும் வரைமுறையின்றி திட்டித் தீர்த்து, சிந்தனை ஏதுமற்ற ஒரு லும்பன் இரசிகப் பட்டாளத்தை உருவாக்கிய 'பெருமைக்குரியவர்தான்' இந்தக் காளியம்மாள்.
காளியம்மாள்
இவர் ஊர் ஊராகச் சென்று கூட்டம் பேசியதைத் தவிர வேறு என்ன செய்தார்? சொந்தக் காசை செலவு செய்தா கூட்டங்களுக்குச் சென்று வந்தார்? வாயை விற்று காசு பார்க்கும் கலையை கைவரப் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இன்று தாள்கள் படபடத்தால்தானே இவர்களின் வாய்கள்கூட மேடை ஏறுகின்றன.
சாக்கடை எங்கு ஓடினாலும் புழுக்கள்தான் நெளியும். காளியம்மாள் எந்தக் கட்சியில் இணைவார் என்று ஆருடம் சொல்வதைவிட, சாக்கடைகளை மூடுவது எப்படி என்பதை யோசிப்பதே அறிவுடமை.
மாமிசப் பிண்டத்தில் நெளியும் புழுக்கள், ஒன்றை ஒன்று விழுங்க முயலும் போது, ஒரு சில புழுக்கள் அங்கிருந்து நழுவ முயல்வது இயல்புதானே?
அரசியலில் காளியம்மாள் ஒரு கவர்ச்சிக்காரி. திரைப்பட ஆட்டக்காரிக்கும் காளியம்மாவுக்கும் என்ன வேறுபாடு? முன்னவர் காசுக்காக திரைகளில் ஆடைகளை அவிழ்க்கிறார். பின்னவர் அதே தேவைக்காக மேடைகளில் வாயை அவிழ்க்கிறார்.
ஊரான்
No comments:
Post a Comment