மூன்று வயது குழந்தைகள் முதல் மூப்படைந்த மூதாட்டிகள் மீதான காமக் கொடூரன்களின் பாலியல் அத்துமீறல், வன்கொடுமைகள் அதிகரித்து வரும் இன்றைய காலத்தில், பாலியல் சீக்காளி சீமானின் பேட்டிகளும், அவனுக்குப் பின்னாலே நிற்கும் தற்குறித் தம்பிகளும், தங்கைகளும் நடந்து கொள்ளும் விதமும், பாலியல் வன்முறை எல்லாம் மிகச் சாதாரணமான ஒன்றுதான் என்கிற
மனநிலைக்கு மக்களைப் பழக்கப்படுத்துவதாகவே உள்ளது.
ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அவனது கதையாடல்களை விடவும், பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய அவனுடைய கருத்துக்களை விடவும், திராவிடம்-தமிழ்த் தேசியம் குறித்த அவனது அரைவேக்காட்டு அரசியலை விடவும், தற்போது அவன் பேசி வரும் பாலியல் தொடர்பான கருத்துக்கள் மிக மிக ஆபத்தானது.
சீமானின் இந்தப் பாலியல் வன்கொடுமையை மிகச் சாதாரண ஒன்றாக, மக்களை உளவியல் ரீதியாக மடைமாற்றும் வேலையை ஊடகங்கள் மிகக் கச்சிதமாக செய்து வருகின்றன.
லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட ஊழல் பேர்வழிகள் தங்களது கட்சி, சங்கம், சாதி, மதம் என்ன ஏதோ ஒரு வகையில் தங்களுக்கானவர்களாக இருந்துவிட்டால், அவர்களின் லஞ்ச ஊழல் முறைகேடுகளைக் கண்டும் காணாமலோ அல்லது எதிர்த்துப் போராடாமலோ இருந்ததன் விளைவு, "யார்தான் சார் கொள்ளை அடிக்கல?" என்கிற மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டதால்தான் இன்று லஞ்ச ஊழல் முறைகேடுகள் மிகச் சாதாரண ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் விளைவு, பரப்பன அக்கிரகாரத்தில் வாசம் செய்த ஊழல் பேர்வழிகள் 'அம்மா'க்களாகவும், 'சின்னம்மா'க்களாகவும் வலம் வருகின்ற அவலத்தை நாம் பார்த்து வருகிறோம்.
கருத்தளவில் உருவாக்கப்படும் அளவுமாற்றம், பண்பு மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்பதற்கிணங்க சீமானின் பாலியல் விவகாரத்தில் பொதுச் சமூகத்தின் இன்றைய அமைதி இதை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது.
பொதுச் சமூகம் இதற்கு எதிராகக் களத்தில் இறங்கி இப்போதைக்குப் போராடவில்லை என்றால், பாலியல் வன்கொடுமை நடக்கும் போதெல்லாம், குற்றவாளி தங்களுக்கு வேண்டியவனாக இருந்துவிட்டால், "யாருதான் சார் இதெல்லாம் பண்ணல?" என்கிற மனநிலைக்கு மக்கள் மாறுவதோடு, பாலியல் குற்றவாளிகளை மாலை போட்டு வரவேற்கும் அவலமும் நடக்கும்! நடக்கும் என்ன இன்று சீமானின் விவகாரத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய ஒரு கேடுகெட்ட சமூகத்தில் நாம் வாழுகிறோமே என்கிற குற்ற உணர்வு நமக்கு வருமேயானால், சீமான் போன்ற பாலியல் குற்றவாளிகள் வெளியில் தலை காட்ட முடியுமா?
ஊரான்
No comments:
Post a Comment