இன்றைய பெரும்பாலான காணொளிகள் எதற்காக?
இரும்பு, அலுமினியம், பித்தளைப் பாத்திரங்களில் சமைத்து உண்பது பற்றி ஒரு காணொளியில் உலோகங்களைப் பற்றி கதை அளந்திருந்தார்கள். இரும்புச் சட்டியில சமைச்சா உடம்புக்கு இரும்புச் சத்து சேருமாம்? என்னமோ சட்டியில உள்ள இரும்பு சூடாகி உருகி (melt) அப்படியே நேரா உணவோடு சேர்ந்து குருதியில் கலக்குற மாதிரி பேசுறாங்க. இந்தக் காணொளியில் ஐயர்ன், அலுமினியம், நிக்கல், குரோமியம் போன்ற உலோகங்களை அலசுவதோடு மட்டுமல்ல, 'ஹெவி மெட்டல்' பத்தி எல்லாம் பேசுறாங்க. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பத்தி எல்லாம்கூட பேசுறாங்க.
Metallurgy படிச்சவனையே மிரள வைக்கிறாங்கன்னா பாத்துக்கங்களேன்!
இவர்களுக்கு அறிவியல் எதுவும் தெரியாது. தெரிந்தது போல காணொளியை வெளியிட்டு அதை நம்மைப் பார்க்க வைத்து அதன் மூலம் காசு பார்ப்பவர்கள்.
இவர்களின் காணொளிப் பார்வைகள் மில்லியங்களைத் தொடும் பொழுது இவர்கள் லட்சங்களில் புரளுகிறார்கள். சவுக்கு சங்கர் அதற்கு ஒரு எடுப்பான உதாரணம். அவன் அரசியலில் கதை அளந்து காசு பார்த்தான். இவர்கள் அறிவியல் என்ற போர்வையில் கதை அளந்து காசு பார்க்கிறார்கள்.
சமையல், உணவு, உடல் நலம், ஜாதகம், ஜோதிடம் என எண்ணற்ற தலைப்புகளில் இவர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது காணொளிகளைக் காணும் பொழுது நம்முடைய டேட்டா உருவப்பட்டு அவர்கள் காசு பார்க்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் சொல்வதை உண்மை என நம்பி அதை கடைபிடித்து கெட்டுப் போகிறவர்களும் நாம்தான்.
துட்டு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்கிறோம்.
அறிவியல் ரீதியாக மக்களுடைய சிந்தனை மட்டம் மிகவும் பின்தங்கி இருப்பதால்தான்.
இத்தகையக் காணொளிகளை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்; அவற்றை நம்பவும் செய்கிறார்கள்.
எனவே, நாம் உண்மையை, அறிவியலை புரிந்து கொள்வதோடு, அடுத்த சந்ததிக்கும் உண்மையைப் புரிய வைத்தால் மட்டுமே காணொளி அலப்பறைகளும், கொள்ளைகளும் குறைய வாய்ப்பு உண்டு.
ஊரான்
வணக்கம். மிகச் சரியான ஒரு விஷயத்தை மிகச் சரியான கோணத்தில் அலசி இடுகை இட்டு இருக்கிறீர்கள். இதற்கு பாராட்டுக்கள். உண்மையில் மக்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுகிறார்கள் என்பது முதல் காரணமாக இருக்கிறது. இரண்டாவது காரணம் யார் நம்மை கேள்வி கேட்க போகிறார்கள், இதற்காக எந்த முறையிலே இவர்களை தண்டிக்க முடியும் என்ற வழிகாட்டுதலும், சட்ட நெறி முறைகளும இல்லை என்பது ஒரு முக்கிய காரணம் .என்ன இருந்தாலும் நம் மக்களை எதைச் சொல்லியும் ஏமாற்றுவதற்கு பல்லாயிரக்கணக்கானோர் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறார்கள் . அது அதிலிருந்து விலகிச் செல்ல மக்கள் பழகிக் கொண்டால் போதும் என்று தோன்றுகிறது. நன்றி
ReplyDeleteநன்றி சக்திவேல். இது போன்ற எண்ணற்ற தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் பகுத்தறிவு பேசுவோர்கூட இது குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. காரணம் பலரும் காணொளிகளை வெளியிட்டு காசு பார்க்க முனைந்து விட்டார்கள் என்பதுதான்.
Delete