ஒரு பக்கம் 10 இலட்ச ரூபாயில் கோட்டு அணிந்து இந்தியாவின் செல்வச் செழிப்பை உலகெங்கும் பறைசாற்றும் இந்தியர்களின் வழிகாட்டி.
மறுபக்கம் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்வியல் முறை” என நம் பாரதப் பெருமையை நிலைநாட்டும் இந்துக்களின் வழிகாட்டிகள்.
கண்ணியமாக உடையணிந்துள்ள பெண்கள் முன்னிலையில் அம்மணமாய் அருள்பாலிக்கும் ஆன்மீக ஆண்கள் மறுபக்கம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை கோப்பை கிடைக்காவிட்டால் என்ன? அடுத்த ஒலிம்பிக்ஸில் ”உசேன் போல்ட்டுக்கு ஆப்பு! அம்மண ஓட்டத்தில் நமக்கே தங்கம்!” என ஆர்ப்பரிக்கும் அகோரிகள்.
இதுதான் புனிதம் என்பதோ!