Saturday, March 29, 2014

தமிழகமே திருமங்கலமாக மாறுமா?

கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக  மே,  2007 ல் மதுரை தினகரன் - சன் தொலைக்காட்சி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 3 பேர் பலியானதையும் 7 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையும் சாமான்யர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.


மு.க.அழகிரி
“2009 ல் திருமங்கலம் சட்டசபை இடைத் தேர்தலில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, டிவி, சி.டி பிளேயர், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களோடு பணத்தையும் கொடுத்து தி.மு.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்தவர் அழகிரி” என்றும் அந்த வெற்றியை “திருமங்கலம் பார்முலா” என்றும் ஊடகங்கள் வர்ணித்தன. திருமங்கலம் பார்முலா டில்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

திருமங்கலம் பார்முலா இப்போது தமிழக பார்முலா ஆகியுள்ளது. இந்த பார்முலா குறித்து மக்களுக்குத் தெரியும். வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை என்று திமுக மறுத்தது. அது உண்மை என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் உதவியாளரே இதை ஒப்புக்கொண்டுள்ளார்” என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சங்கரன் கோவில் இடைத் தேர்தலையொட்டி 2011 மார்ச்சில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்  நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “திருமங்கலம் பார்முலாவை இப்போது அ.தி.மு.க தன்வசம் எடுத்துக்கொண்டுவிட்டது” என தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூ‌றினார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிவகங்கை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் ஹெச்.ராஜா, தேனி தொகுதியில் போட்டியிடும் .தி.மு.. வேட்பாளர் அழகுசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு, கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், மதுரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பரத் நாச்சியப்பன்  ஆகியோர் அழகிரியை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கேட்டுள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஹெச்.ராஜா
மதுரை தினகரன் - சன் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்காகவும், திருமங்கலம் பார்முலாவுக்காகவும் அழகிரியை அன்று வசைமாரி பொழிந்தவர்கள்தான் இன்று அவரது காலை நக்கிப் பிழைக்க அவரையே சுற்றிச் சுற்றி வருகின்றனர்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார்
இடைத் தேர்தல் மட்டுமன்றி ஊராட்சி - நகராட்சி தொடங்கி சட்மன்ற - நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை இந்த நாட்டில் நடைபெறும் ‘மக்களாட்சித்’ தேர்தல்கள் எதுவாக இருப்பினும் திருமங்கலம் பார்முலாவை பின்பற்றினால் மட்டுமே வெற்றிக் கோட்டை எட்ட முடியும் என்பது வேட்பாளர்களுக்கும் தெரியும்; வாக்காளர்களும் புரிந்தே வைத்துள்ளனர். 16 வது மக்களவைத் தேர்தலில் செங்கோட்டையை குறிவைத்து அம்மா காய்களை நகர்த்துவதால் இம்முறை தமிழகமே திருமங்கலமாக மாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் வாக்காளர்களும் வாய் பிளந்து காத்திருக்கிறார்கள்.

தாங்கள் மட்டும் மானங் கெட்டால் போதாது என்பதால் ஒட்டு மொத்த மக்களையும் மானங்கெட்டவர்களாக மாற்றுவதையே நடைமுறைாயக் கொண்டுள்ள வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகளால் நாம் கண்ட பயன் என்ன? இதில் நல்லவர்களைத் தேட வேண்டுமாம்; இல்லையேல் நோட்டாவை நாட வேண்டுமாம். 

நாம் தேட வேண்டியதையும் நாட வேண்டியதையும் பற்றி வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.

2 comments:

  1. அடுத்த பதிவை படித்ததும் என் கருத்தைச் சொல்கின்றேன்.

    ReplyDelete
  2. ஆக மொத்தம் எல்லாம் நாசாமாப் போகப் போவுது.. வேட்பாளரின் தராதரம் பார்த்து வாக்குப் போடுவதே நல்லது, கட்சியையும் கட்சியின் சின்னத்தையும், சின்னத்தின் வண்ணத்தையும் வண்ணத்தின் எண்ணத்தையும் பார்த்து வாக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்... மக்கள்.. இல்லையேல் அரோகரா தான்..

    ReplyDelete