இது வேலூர் தொகுதியில் நடந்தது.
எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில்
மொத்தம் நான்கு வாக்குகள். பா.ஜ.க. சார்பில்
கொடுத்தது தலா ரூ.300 வீதம்
மொத்தம் ரூ1200. அ.தி.மு.க சார்பில்
கொடுத்தது தலா ரூ.200 வீதம்
மொத்தம் ரூ800. இருப்பதோ நாக்கு
வாக்குகள். யாருக்கு எத்தனை வாக்கு போடுவது
என்பதில் குழப்பம்தான். இருந்தாலும் ‘நடு
நிலை’ எடுத்து தாமரைக்கு இரண்டு
வாக்கும், இரட்டை இலைக்கு இரண்டு
வாக்கும் என வாக்களித்து தர்மத்தை நிலை நாட்டி இருக்கிறார்கள்.
இவர் ஒன்றும் அன்றாடம் காய்ச்சி
அல்ல. பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40000
ஊதியம் பெறும் ஊழியர்.
இந்த பணப்பட்டுவாடாவையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்த
பிறகுதான் தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
என மார்ச் 29 ல் நான் எழுதியது நடந்தேறிவிட்டது என்று.
No comments:
Post a Comment