காதல் இல்லை என்றால் …….
ஆட்டனத்தி – ஆதிமந்தி இல்லை
ரோமியோ - ஜுலியட் இல்லை
சகுந்தலை - துஷ்யந்தன் இல்லை
லைலா - மஜ்னூ இல்லை
மும்தாஜ் - ஷாஜஹான் இல்லை
கிளியோபட்ரா - மார்க் அண்டனி இல்லை
அம்பிகாபதி - அமராவதி இல்லை
தேவதாஸ் - பார்வதி இல்லை
உதயணன் - வாசவதத்தை இல்லை
மாதவி
- கோவலன் இல்லை
சிலம்பில்லை
- சிலப்பதிகாரமில்லை
வள்ளி இல்லை - முருகன் இல்லை
காதற் சிறப்புரைக்கும் 133-ஆம் அதிகாரம் இல்லை
இலக்கியங்கள் இல்லை - காவியங்கள் இல்லை!
இலக்கியங்கள் இல்லை - காவியங்கள் இல்லை!
காதல் இல்லை என்றால் …….
போரில்லை
- வீரமில்லை
கதைகள்
இல்லை - நாடகங்கள் இல்லை
நாவல்
இல்லை - கவிதை இல்லை
ஓவியம்
இல்லை – சிற்பமில்லை
குயில்
இல்லை – ஓசை இல்லை
பாடல்
இல்லை - இசை இல்லை
ஆட்டமில்லை
- பாட்டமில்லை!
காதல் இல்லை என்றால் …….
விசுவநாதன்
- ராமமூர்த்தி இல்லை
அடிமைப்
பெண்ணும் - ஆயிரத்தில் ஒருவனும் இல்லை
ஸ்ரீதர்
இல்லை – காதல் சினிமா இல்லை
சாம்பார் இல்லை – சாவித்திரி இல்லை
சிவாஜி இல்லை – பத்மினி இல்லை
எம்.ஜி.ஆர் இல்லை – சரோஜாதேவி இல்லை!
காதல் இல்லை என்றால் …….
பாலசந்தரும்
– அவள் ஒரு தொடர் கதையும் இல்லை
பாரதிராஜாவும்
- பதினாறு வயதும் இல்லை
மயிலுமில்லை
- ஆவாரம் பூவுமில்லை
வைரமுத்து
- வாலி இல்லை
இசையும் - இசைஞானியும் இல்லை
‘நானொரு
சிந்து! காவடிச் சிந்து!’ ராகம் ஏதுமில்லை
சிவகுமாரைத்
தேடும் அன்னக்கிளி இல்லை
கமல்
இல்லை – வாழ்வே மாயமில்லை
கார்த்திக்
- ராதா இல்லை; கடலின் அலைகள் இல்லை
மோகன்
இல்லை - அருக்கானி இல்லை
சினிமா இல்லை - சின்னத்திரை இல்லை!
காதல் இல்லை என்றால் …….
'எவர்
கிரீன்' 80 இல்லை
'சன்
டி.வி' - 'விஜய் டி.வி' இல்லை
மான் இல்லை
– மயில் இல்லை
கலா 'மாஸ்டர்' – 'கெமிஸ்ட்ரி' இல்லை
காதல் இல்லை என்றால் …….
வானம்
இல்லை - மேகமில்லை
நிலவில்லை
- குளிரில்லை
மலை
இல்லை - நதி இல்லை
மலர்
இல்லை - வாசமில்லை
தேனில்லை
– வண்டில்லை
தென்றலில்லை
- மூச்சுக் காற்றின் பரிசமில்லை
மொத்தத்தில்-
ஊன் இல்லை - உயிரில்லை
நீ
இல்லை - நான் இல்லை
ஏன்!
இவ்வையகமே இல்லை!
காதல் உனக்கு கசப்பதேன்?
மேலே பார்!
நேற்று
வரை
காதலையே காதலித்தாய்.
இன்று
மட்டும் காதல் உனக்கு கசப்பதேன்?
இந்து முன்னணியும் – அர்ஜூன் சம்பத்தும்
ஈஸ்வரன்களும் - ராமதாசன்களும்
கழுதைப் புலிகளும் - நாய்களும்
காதல் சமுத்திரத்தில் சாதி வெறி நஞ்சைக் கலப்பதாலா?
எழு கடலிலும் ஆழ்கடலிலும் தேடு!
சிங்கிகளும் - வஞ்ஜிரங்களும்
வவ்வாவும் - சீலாவும்
இறாலும் - சுறாவும்
திருக்கையும் - சங்கராவும்
மத்தியும் - நெத்திலியும்
வாலையும் - கோலாவும்
பாறையும் - சூறையும்
கனவாயும் - கொடுவாயும்
என
ஏறாளமாய் இருக்க-
அயிரைகள் குரவைகளுக்காக
சேறு-சகதிகளில் புரண்டது போதும்
குட்டைகளையும் கு'ல'ங்களையும் விட்டேறு!
எழு கடலிலும் ஆழ்கடலிலும் தேடு!
சிங்கிகளும் - வஞ்ஜிரங்களும்
வவ்வாவும் - சீலாவும்
இறாலும் - சுறாவும்
திருக்கையும் - சங்கராவும்
மத்தியும் - நெத்திலியும்
வாலையும் - கோலாவும்
பாறையும் - சூறையும்
கனவாயும் - கொடுவாயும்
என
ஏறாளமாய் இருக்க-
அயிரைகள் குரவைகளுக்காக
சேறு-சகதிகளில் புரண்டது போதும்
குட்டைகளையும் கு'ல'ங்களையும் விட்டேறு!
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment