Friday, July 31, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 5

தீண்டாமையை கடைபிடிப்பதில் இஸ்லாமியர்களும் சளைத்தவர்களல்ல.


1934ம் ஆண்டு அம்பேத்கர் மற்றும் அவருடன் பணிபுரியும் தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 30 பேர் ஒரு சுற்றுலா செல்கின்றனர். அப்பொழுது தவுலாதாபாத் கோட்டையை பார்க்கச் சென்றபோது பயணக் களைப்பில் இருந்ததால் கோட்டைக்கு வெளியே இருந்த ஒரு குளத்தில் கை கால் கழுவினர். தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டதாக ஒரு முகமதியர் கூப்பாடு போட்டார். தெத்களுக்கு கர்வம் பிடித்தவிட்டது. தெத்கள் தங்களுடைய மதத்தை மறந்துவிட்டனர் என இளம் மற்றும் வயதான முகமதியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு அம்பேத்கரையும் அவரது நண்பர்களையும் வசை பாட ஆரம்பித்தனர்.

அவர்கள் தாக்கும் மனநிலையில் இருந்தனர். அவர்கள் தங்கள் கோபக்கனலை உள்ளூர் தீண்டத்தகாதவர்கள் மீது வீசினார்கள். மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தனர். 

அதன் பிறகு தீண்டப்படாதவர்கள் உள்ளே எந்தத்தண்ணீரையும் தொட்டுவிடக்கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் ஆயுதங்தாங்கிய சிப்பாய் ஒருவன் பின்தொடர அம்பேத்கரும் அவரது நண்பர்களும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவன்தானே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துகாட்டுவதாக அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.

தாயையும் சேயையும் கொன்ற தீண்டாமை

கத்தியவார் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான ஒரு பள்ளி ஆசிரியர் பிரசவித்திருந்த தனது மனைவி மற்றும் குழந்தைக்கு மருத்துவம் செய்ய அணுகிய போது தீண்டத்தகாதவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாது என மருத்துவர் ஒருவர் மறுத்துவிட்டார்.

கெஞ்சிக்கூத்தாடிய பிறகு மற்றொரு மருத்துவர் வர ஒப்புக்கொண்டாலும் வீட்டிற்குள் வர மறுத்துவிட்டார். அதனால் தனது மனைவியை பிறந்த குழந்தையுடன் குடியிருப்புக்கு வெளியே கொண்டு வந்தார். பிறகு மருத்துவர் ஒரு வெப்பமானியை ஒரு முஸ்லீமிடம் கொடுக்க, அதை அவர் ஆசியிரியடம் கொடுக்க, அதன் பிறகு அந்த ஆசிரியர் அதை தன் மனைவியிடம் கொடுத்தார். அதை உபயோகித்த பிறகு அதே முறையில் அது திரும்பக் கொடுக்கப்பட்டது. நோயாளிக்கு நிமோனியா ஜீரம் எனக்கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அவளைப் பார்க்க மறுத்தவிட்டார். மருத்துவம் கிடைக்காததால் அந்தப் பெண் இறந்து போனார்.

மருத்துவர் படித்தவராக இருந்தும் தொழில் ரீதியான நடத்தை நெறிகளை குழிதோண்டிப் புதைத்துவிட்ட அந்த மருத்துவருக்கு மனசாட்சி உறுத்தவில்லலை. ஓர் இந்து தீண்டத்தாகாதவனைத் தொடுவதைவிட மனிதாபிமானமற்று இருப்பதையே சிறந்ததாகக் கருதுகிறான்.

வீடு வாடகைக்கு விடும் போது ஜாதி கேட்பதே தீண்டத்தகாதவனா என்பதை அறிவதற்கே!

குஜராத்  ஆமதாபாத்திலுள்ள பிற்பட்டோர் துறை அலுவலகத்தில் கிராம பட்வாரி (தலாத்தி) வேலைக்கு 1938 ம் ஆண்டில் தேர்வு செய்ப்பட்ட தாழ்த்தப்பட்ட பங்கி சாதியைச் சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமையை அவரே விவரிக்கிறார்.

அலுவலக எழுத்தர்: ‘நீ யார்’?

‘ஐயா, நான் ஒரு ஹரிஜன்’

தூரப் போ! தள்ளி நில். இவ்வளவு அருகே நிற்க உனக்கு என்ன தைரியம்? இப்போது நீ அலுவலகத்தில் இருக்கிறாய். நீ வெளியே மட்டும் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன தைரியம்?’

தலாத்தி வேலைக்கான நியமனக் கடிதத்தையும் சான்றிதழ்களையும் தரையில் போடச் சொல்லி பிறகு அதை அவர் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.

அலுவலகத்தில் ஒரு தகரக் குவளையில் குடி தண்ணீர் இருக்கும். தொட்டால் தீட்டாகிவிடும் என்பதால் அதைத் தொடுவதற்கு இந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் அனுமதிக்கப்படவில்லை. இவருக்கு மட்டும் ஒரு பழைய அழுக்கான பானை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். குடிநீர் வழங்குபவர் இவர் குடிப்பதற்காக சிறிதளவு தண்ணீரை அந்தப் பானையில் ஊற்றி வைப்பார். ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு தண்ணீர் ஊற்றுவது பிடிக்காததால் அவர் எங்கேயாவது நழுவி விடுவார். அப்பொழுதெல்லாம் இவர் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் திண்டாட வேண்டும்.

.அதே போல எந்தச் சாதி இந்துவும் இவருக்கு வீடு வாடகைக்கு கொடுக்கவில்ல. அதனால் 6 மைல் தொலைவில் உள்ள தன் மூதாதையர் கிராமத்திலிருந்து அன்றாடம் வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.

இவருடைய தந்தை, அண்ணன் எல்லாம் அலுவலகத்தில் குப்பை கூட்டியவர்கள் இவர் மட்டும் எப்படி அலுவலக வேலை பார்க்கலாம் என்பதால் இவர் மீது வெறுப்பு காட்டினர். ஒரு முறை கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் நாற்காலியில் அது அவருடையது எனத் தெரியாமல் உட்கார்ந்ததற்காக “இந்த பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தது?” என கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த மக்கள் வசைமாறி பொழிந்து கண்டதுண்டமாக வெட்டிவிடுவதாக இவரை மிரட்டினர். “இவ்வாறு மீண்டும் நடக்காது! நான் வேலையை விட்டுவிடுகிறேன்!” என இவர் இரக்கம் காட்டுமாறு கெஞ்சிக் கேட்ட பிறகுதான் அந்தக்கூட்டம் கலைந்தது. பிறகு 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாயிலுள்ள தன் பெற்றோரிடம் சென்றுவிட்டார்.

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

“இன்று யார் சாதி பார்க்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்புவோர் ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்கு விடத்தயாரா?

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனுஅதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

7 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள் அம்பேத்கர் குறித்து எழுதியவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். நானும் அறிந்து கொள்ள ஆவலாயுள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எழுதுகிறேன். அம்பேத்கரை அனைவரும் படிக்க வேண்டும். அவர் கருத்துக்களை அனைத்து தரப்பு மக்களிடையேயும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது அவா.

      Delete
  2. இந்து இந்துக்குள்ளேயே தீண்டாமை பார்க்கிறார்கள் ஆனால் இஸ்லாத்தில் சில வழிமுறை பிரிவு உள்ளது(ஷியா,ஷன்னி,அஹமதியா)ஆனால் தீண்டாமை அறவே கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இந்து இந்துக்குள்ளேயே தீண்டாமை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தீண்டாமையை கடைபிடிக்கிறார்களா இல்லையா என்பதைத்தான் அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். இன்றளவும் இது உண்மையா இல்லையா?

      Delete
  3. “இன்று சாதி பார்ப்பதற்குத்தான் சாதி கேட்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தீண்டத்தகாதவர் எனத் தெரிந்து கொண்டால் வேறு காரணங்களைச் சொல்லி வீடு தருவதை தவிர்த்துவிடுவார்கள்.

      Delete