தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6
“மனுவின் திட்டப்படி
நால்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள், நால் வர்ணத்திற்கு வெளியெ உள்ளவர்கள் என
இரண்டு முக்கியமான சமூகப் பிரிவுகள் உள்ளன.”
“பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் – இந்த நான்கு பிரிவினர்தான் நால்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள்.”
பள்ளர், பறையர்,
சக்கிலியர் என அறியப்படுகிற இன்றைய தீண்டப்படாதவர்கள் நான்கு வர்ணத்திற்கு வெளியே
உள்ளவர்களின் நகல்கள்தான்.
“சமுதாயச்சிந்தனையைவிட
வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய
அமைப்பு. அது, வகுப்பினர்களிடையே சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டது. எனவே தனி
நபர்களிடையே ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்டது.”
“தெளிவாகச் சொல்வதென்றால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாதவர்கள் ஆகிய வகுப்பினர்கள்
எல்லோரும் சமநிலையில் அதாவது ஒரே மட்டத்தில் உள்ளவர்களாக இல்லை. அவர்கள் படி
நிலையில் அதாவது ஒருவரைவிட ஒருவர் உயர்வான நிலையில் இரக்கிறார்கள். இந்தக் கூற்றை
எந்த இந்துவும் மறுக்கமாட்டார். ஒவ்வொரு இந்துவுக்கும் இது நன்கு புரியும்”
பிராமணர் என்பது ஒரு சாதி
அல்ல. ஐயர், வடகலை ஐயங்கார், தென்கலை ஐயங்கார் போன்ற பல்வேறு சாதிப்பிரிவினர்களை
உள்ளடக்கியதே பிராமணர் என்பது. ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட
சாதியினரிடையே ஏற்றத் தாழ்வுகள் / கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வர்ணத்தில்
ஒரே வர்ணமாக அதாவது பிராமண வர்ணமாக தங்களைக் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள்
தங்களை பிராமணர்கள் என அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்து சமூக அமைப்பில் மற்றபிற
அனைத்து சாதியினருக்கும் மேலானவர்களாக நிலை நிறுத்திக் கொள்கின்றனர். அதனால்தான்
ஒரு பிராமணன் மற்ற அனைத்து சாதியினரையும் தனக்கு கீழானவர்களாக கருதுகிறான்.
பார்ப்பனரல்லாத பிற உயர்சாதியினர் (OC), பிற்படுத்தப்பட்டோர் (BC or OBC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலுக்குள் அடங்கும் சாதியினர் தங்களை சத்திரியர்கள், வைசியர்கள் என கூறிக்கொண்டாலும் பிராமணர்களைப் போன்று இவர்கள் ஒரு வர்ணமாக அறியப்படுவதில்லை. யார் சத்திரியன், யார் வைசியன் என்பதில் இவர்களுக்கிடையில் பெரும் சச்சரவு நிலவுகிறது. சூத்திரர்கள் என்று எந்தச் சாதியனரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாததால் எந்தெந்தச் சாதிகள் சூத்திர வர்ணத்துக்குள் அடங்குவர் என்பது ஆய்வுக்குரியதாகவே உள்ளது.
திராவிட நாட்டை ஆண்ட சத்திரியர்கள் அனைவருமே சூத்திரர்கள்தான் என மனுவே பிரகடனப்படுத்தியிருக்கிறான். (மனு:10:44). எனவே தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் சத்திரர்கள் என யாரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. கலியுகத்தில் சத்திரர்களே கிடையாது என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இது பற்றி வேறு ஒரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம்.
“மனுஸ்மிருதியில் மனுவால்
விதிக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வு நிலை, வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே உள்ள ஒரு நிகழ்வு
என வாதிடக்கூடும். அது பழைய வரலாறு, மற்றும் இன்றைய இந்துக்களின் வாழ்க்ககை
நடைமுறையில் அதற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறலாம். இதைவிடப்
பெருந்தவறு வேறு இருக்க முடியாது என நிச்சயமாகக் கருதுகிறேன். மனுநியதி என்பது
ஒரு கடந்தகால நடைமுறையல்ல. தற்காலத்தின் இறந்தகாலத்தைவிட அது அதிக மெய்யானது. அது ‘வாழ்ந்து
வரும் கடந்த காலம்’. எனவே எந்த நிகழ் காலத்தையும் போலவும் அது ஓர் உண்மையான
நிகழ்கால விசயம்தான்.”
(ஆதாரம்:
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)
மனு நிர்ணயித்திருந்த
ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வருவதற்கு மன்பே இந்த
நாட்டின் சட்டமாக இருந்தது பற்றி இனி பார்ப்போம்.
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment