Showing posts with label மகஇக. Show all posts
Showing posts with label மகஇக. Show all posts

Tuesday, May 6, 2025

கழிசடைகளின் கூடாரமாக "புரட்சிகர மக்கள் அதிகாரம்"!

 "புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற கோஷ்டியைச் சேர்ந்த புவன் என்கிற ஒரு நபர், பாடகர் கோவனுக்கு எதிராக முகநூலில் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். 

புவன் காணொளி

Sekar P: "நீங்கள் பேசியதை நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்களேன். ஏதாவது புரிகிறதா என்று பார்ப்போம். எல்லாம், காணொளிகளுக்கு வந்தக் கேடு."

என அதற்கு ஒரு மறுமொழியை நான் வெளியிட்டிருந்தேன்.

அதற்கு, அதே "புரட்சிகர மக்கள் அதிகாரம்" கோஷ்டியைச் சேர்ந்த பென்னாகரம் "தோழர் கோபிநாத்" என்ற நபருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

"கோபிநாத்": நீங்க இப்படி பேசுறதெல்லாம் கேக்குறது எங்களுக்கு சாபக்கேடு.

Sekar P:  வாண்டுகளின் வசவுகளைக் கேட்பதும் ஒரு சாபக்கேடுதான்.

"கோபிநாத்": உங்களைப் போன்ற துரோகிகளின் தூற்றலை கேட்பதும் சாபக்கேடுதான்.

Sekar P:  நான் உமக்கு என்ன துரோகம் பண்ணினேன் தம்பி? வசவு பாடி வம்படிப்பதுதான் உங்கள் வேலையோ? மீசைக்கார தாத்தா நல்லா வளத்திருக்காரு. வேறென்ன செய்ய? பெல் சிட்டி ஊழலை வளர்த்தவரின் வாரிசுகள் இப்படித்தானே பேசுவீங்க. நல்லா வருவீங்க தம்பி. வாழ்த்துகள். பணம் கொடுத்து ஏமாந்த பெல் ஊழியர்கள், அகவை 65 ஐத் தாண்டியும் மீசைக்கார ஆசானைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், நியாயம் கேட்க?

"கோபிநாத்": நீ எனக்கு துரோகம் செயல சேகரு, கட்சியை காட்டி கொடுத்து திமுகவுக்கு அடகு வைத்து, மருதையனின் ரசிகர் குஞ்சியா ? வளம் வந்து புரட்சிகர கட்சியை துரோகம் பாதைக்கு எடுத்துட்டு போன திருடர்களுக்கு, துணை போன நீ துரோகி இல்லையா.

பெரிய தியாகி நீ, பெல் சிட்டி ஊழல் என்றால், அங்கு தங்கி கூத்தடித்த மருதையனும், காளியப்பனும் தியாகியா? சேகர். நீ துரோகிகளின் வாரிசு. அமைப்பு சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்ட துரோகிகளின் கூட்டத்தில் உலாவும் பெருச்சாளி நீ. அமைப்பை உடைக்க பெல் சிட்டி ஊழல் என்கிற பதத்தை பயன்படுத்திய அயோக்கியர்கள். ஊழல் இருப்பின் ஏன் மருதையன்  ஓடி ஒளிந்து கொண்டான். எங்கு போனான், ஏன் எந்த கூட்டத்திற்கு வரவில்லை. ஏன் தலை மறைவு, ஏன் வெளிப்படையாக பேசவில்லை, ஏன் அணிகளிடம் வைத்து போராட வில்லை, இப்படி எத்தனையோ கேள்விகள் இருக்கிறது. ஏனென்றால் கட்சி உடைக்க துரோகி மருதையனுக்கு கிடைத்த ஆயுதம் பெல்சிட்டி ஊழல், சரி உங்களுக்கு இதற்கெல்லாம் கேள்வி கேட்க நேரமில்லை, பாவம் திமுகவிற்கு போய் சொம்புபடியுங்கள். உனக்கு எப்படி புரியும். நாங்க பேசறது .

நீங்க போயி திமுக கூட சேர்ந்து புரட்சி பண்ணுங்கள்.

***
இதைத் தொடர்ந்து நான் எழுதிய மறு மொழிகளை வெளியிடாமல் முடக்கிவிட்டது அந்த கோஷ்டி.

***
தொடர்ந்து எனக்கு எதிராக வசவுச் சொற்களை வாரி இறைத்தது.

"கோபிநாத்": டேய் பொறுக்கி, திமுக கிட்ட காசு வாங்கி வேலை செய்ற அயோக்கிய பயலே, உனக்கு கட்சியை பத்தியோ அல்லது நக்சல்பாரி அரசியல் பற்றியோ ஒரு மயிரும் தெரியாதுடா. கட்சியை திமுககிட்ட அடகு வச்சி பிழைப்பு நடத்துற அயோக்கிய பயலுகளுக்கு குண்டி கழுவி விடற நாயி நீ. எவண்டா உன்கிட்ட வரணும். நான் வரண்டா , உன் தலைவனை வர சொல்லுடா பேசுறதுக்கு. எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்கு அயோக்கிய பயலே.

***
கோபிநாத் என்ற இந்த நபருக்கு ஒரு 35 வயது இருக்கும். எனக்கோ வரும் 27 இல் 67 வயது முடிகிறது.

நான் மகஇக தொடங்கிய 1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் இருபது ஆண்டு காலம் மகஇக மாநில செயற்குழுவிலும், தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" மாநில நிர்வாகக் குழுவிலும் செயல்பட்டு வருகிறேன். எனது புரட்சிகர வாழ்க்கை அனுபவங்களை "இழி குணம்" என்ற தொடரில் விரிவாக இதே தளத்தில் எழுதி உள்ளேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பிற்குள் வந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த கோபிநாத் போன்ற இத்தகைய நபர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்கள் என்பதை இந்த உரையாடலே உணர்த்தி விடுகிறது.

'பெல் சிட்டி' ஊழலுக்கு உடனிருந்த இந்தக் கும்பலின் தலைவர் இருவர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது, மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து சில நபர்களுடன் வெளியேறி, சில காலம் 'மக்கள் அதிகாரம்' பெயரிலேயே செயல்பட்டு, தற்போது "புரட்சிகர‌ மக்கள் அதிகாரம்" என்ற பெயரில் செயல்படுகின்றனர். இது ஒரு ரவுடிக் கும்பல் என்பதை பழைய தோழர் ஒருவர் மிகச்சரியாகவே கணித்திருக்கிறார்.

எனவே, கோபிநாத் போன்ற நபர்களையும், இத்தகைய நபர்களை முன்னணியாளர்களாகக் கொண்ட "புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற குப்பலையும் அடையாளம் கண்டு புறந்தள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணி
மகஇக முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர்
06.05.2025

Tuesday, June 28, 2022

ஓ! தோழனே! உனது மரணத்தை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது!

1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் 20 ஆண்டு காலம் புரட்சிகர அரசியல் பயணத்தில் அவரோடு மிக நெருக்கமாக பயணித்திருக்கிறேன். நான் மிகத் தீவிரச் செயல்பாட்டாளராக வாழ்ந்த காலம் அது. அதன் பிறகு எனது உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சில ஆண்டுகாலம் அவரோடு நெருங்கிப் பழக-பயணிக்க முடியவில்லை என்றாலும் இயக்க வேலைகளினூடே அவரை அவ்வப்பொழுது பார்க்கும் பொழுது ஒரு இனம் புரியாத உற்சாகம் பிறக்கும். பிரியமானவர்களின் ஸ்பரிசம் அது.

நகமும் சதையும் போல எனது குடும்பத்தோடு உறவாடியவர். எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது, அவர்களுக்கு ஒரு மூத்த நண்பனாக விளங்கியவர். நானும் எனது துணைவியாரும் இல்லாத போது அவரே எனது பிள்ளைகளைப் பராமரிப்பார்.  அதனால்தானோ என்னவோ ஒரு இருபது ஆண்டு காலம் அவரை எனது பிள்ளைகள் பார்க்கவில்லை என்றாலும், பிள்ளைகளின் நினைவில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘எயிலு’ என எனது இளைய மகனை அவர் வாஞ்சையோடு அழைக்கும் அந்தக் குரல் என் காதுகளில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

அரசியல் மற்றும் களப்பணிகளின் போது ஏற்படும் தவறுகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதே வேளையில் மேலும் என்னை வளர்த்துக் கொள்வதற்கு உற்சாகப் படுத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க எனது இல்லம் தேடி அவர் வந்த போது நான் “ஊரான்” வலைப்பூவில் எழுதுவது குறித்து அறிந்து கொண்டு, மேலும் மேலும் எழுதுமாறு உற்சாகப் படுத்தியவர். முன்னணியாளர்களின் அரசியல் பயிற்சிப் பட்டறையில் ”மனுதர்ம சாஸ்திரம்” குறித்து உரையாற்ற ஒரு கருத்தாளராக நான் செல்வதற்கு இந்தச் சந்திப்புதான் வழி வகுத்தது. 

மிகக் கடுமையான உணவு கட்டுப்பாடுகளுடன் அப்பொழுது அவர் இருந்ததை நான் பார்த்த போது என் நெஞ்சம் ஏனோ சஞ்சலப்பட்டது. நோய்வாய்ப்பட்டுள்ள காலத்திலும், வயது முதிர்ந்த காலத்திலும் ஒருவர் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வது எத்துணை கொடூரமானது என்பது அவரைப் போல அனுபவித்தவர்களுக்குதான் புரியும். 

நக்சல்பாரி பொதுவுடமைப் புரட்சி அரசியலை மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பெயரில் தமிழகத்தில் பரப்புரை செய்ததில், அரசியல் தலைமைக் குழுவின் செயலாளராக இருந்து வழிகாட்டிய அவரது பங்களிப்பு அளப்பரியது. இவரைப்போன்ற முகம் தெரியாதவர்கள்தான் மார்க்சிய-லெனினிய நக்சல்பாரி அரசியலுக்கு முகவரி கொடுத்தவர்கள்.

புரட்சி என்ற நீண்ட நெடிய பயணத்தில், சகடுகள் நிறைந்த இச்சமூகத்தில் பயணிக்கும் போது, சில சறுக்குல்களும் பின்னடைவுகளும் தவிர்க்க முடியாதவை.  கடந்த சில ஆண்டுகளாக அவரது அரசியல் வாழ்க்கையில் சறுக்கல்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டதன் விளைவாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கக்கூடும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. முதுமை காலத்தில் முடிவுக்கு வராத மன உளைச்சல் உயிருக்கே உலை வைக்கும் என்பது எல்லோருக்கும் பொருந்தும்தானே? 

என் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ‘இஎல்' எனும் என் இனிய தோழனே! சென்று வா! இறுதிக்காலம் மட்டுமே வரலாறு அல்ல. நீ கடந்து வந்த நீண்ட நெடிய பாதையின் சாதகங்கள்-சாதனைகள் நினைவு கூறப்படும் பொழுது சமூக மாற்றம் அடுத்த கட்டத்திற்கு தாவிச் செல்லும்! 

கண்ணீர்த் துளிகளுடன்,

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!