கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.50 000 கோடி மதிப்பிலான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சட்ட விரோதமாக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடத்தப்பட்டுள்ளன.
இம் மூவரும் ஒரே அமைச்சரவையில் அமைச்சர்களாம்.
அவர்கள் உட்காருவதும் உறங்குவதும் ரூ.45 கோடி மதிப்புடைய தங்கத்திலான இருக்கைகள் மற்றும் படுக்கைகளில்தானாம்.
அவர்கள் உறங்கும் அறையில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கும் ரூ.100 கோடி மதிப்பிலான வைரக் கிரீடம்.
ரெட்டி உடன் பிறப்புகளில் ஒருவரான ஜனார்தன ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்குச் சார்த்திய ரூ.40 கொடி மதிப்பிலான வைரம் பதித்த கிரீடம்தான் இது. இது போன்ற ஒன்றுதான் பெல்லாரியில் அவரது இல்லத்தில் இருப்பது. திருப்பதி ஏழுமலையானுக்குக் கிடைத்த எப்போதுமில்லாத மிகப்பெரிய ஜாக்பாட் இதுதானாம்.
நடுவன் புலனாய்வுப் பிரிவு (CBI) கண்டெடுத்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கரண்டிகள்.
பெல்லாரியில் இருக்கும் ரூ.120 கோடி மதிப்பிலான அவர்களது மாளிகை.
பெல்லாரிக்கும் பெங்களூருவுக்கும் மதிய உணவு மற்றும் இரவு விருந்துக்குக்கூட ரெட்டி உடன் பிறப்புக்கள் ஹெலிகாப்டரில்தான் பயணிப்பார்களாம்.
உலகின் அதிநவீன சொகுசுக் கார்கள் ரெட்டி உடன்பிறப்புகளின் வீட்டில் எப்போதும் அணிவகுத்திருக்குமாம்.
பிள்ளைகள் என்னதான் குற்றமிழைத்தாலும் எந்தத் தாய்தான் விட்டுக் கொடுப்பாள்? பாரதத் தாய் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?
தழைக்கட்டும் தாய்ப்பாசம்!
ஓங்கட்டும் பாரதத்தின் பெருமை.
பாரத் மாதா கி ஜே!