Wednesday, December 24, 2014

பண்டாரங்களின் தொந்தியைப் பெருக்கும் சனிப் பெயர்ச்சி!

சனிப் பெயர்ச்சி: கோத்ரா ராசியை விட்டு அயோத்தி ராம ராசிக்குள்….. பொதுப்பலன் (26.05.2014 முதல் 25.05.2019)----தொடர்ச்சி


“பூமி விலை அதிகரிக்கும்.
மணல் தட்டுப்பாடு அதிகரிக்கும்.
வனங்களெல்லாம் வளமிழக்கும். பழமையான மூலிகை, மரம், செடி கொடிகளெல்லாம் அழியும்.
வன விலங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும்.
கூட்டுக் குடும்பங்களெல்லாம் பிரியும்.
சகோதரங்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள் அதிகமாகும்.
சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பகளிடையே மோதல்கள் மூளும்.
சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும்.
20 வயது முதல் 45 வயதிற்குள்ளானவர்கள் விபத்துகள் மற்றும் விநோத நோயால் உயிரிழப்புகளுக்குள்ளவார்கள்.
உலகெங்கும் வன்முறை சம்பவங்கள், மனிதாபிமானமற்றச் செயல்கள் அதிகரிக்கும்.
பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும்.
முறையற்ற பாலுறவுகள் அதிகரிக்கும்.
உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும்.
பருப்பு வகைகள்  துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை அதிகரிக்கும்.”
இவை சனிப் பெயர்ச்சியையொட்டி ஒரு பண்டாரம் கணித்துள்ள பலன்கள்.
சமூக நிலையை ஓரக்கண்ணால் பார்த்தாலே போதும்; எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஒரு பாமரனால்கூட சொல்லிவிட முடியும். எந்த ஓட்டுக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இன்றைய சமூக எதார்த்தம் இதுதான்.
சனி வீடு மாத்தராராம் எல்லோரும் உஷாரா இருக்கணுமாம். பரிகாரம் செஞ்சிக்கணுமாம். இல்லைன்னா நீங்க உருப்படவே முடியாதாம். இப்படி மக்களிடையே பீதியைக் கிளப்பி கோவில்களை நோக்கி விரட்டுகிறார்கள். இருப்பதையெல்லாம் வாறிக் கொண்டு ஏமாளிகள் கோவில்களை மொய்க்கிறார்கள். வாறிச்சென்றதை எல்லாம் பண்டாரங்களின் தொந்தியில் திணித்துவிட்டு வெறுங்கையோடு திரும்பியதைத்தவிர சனிப் பெயர்ச்சியால் நம் மக்கள் கண்டதென்ன?
தொடரும்...
தொடாபுடைய பதிவுகள்:

சனிப் பெயர்ச்சி: கோத்ரா ராசியை விட்டு அயோத்தி ராம ராசிக்குள்….. பொதுப்பலன் (26.05.2014 முதல் 25.05.2019)

7 comments:

  1. பார்பான் செய்யும் அற்பமான வேலை இது. இதனை அறிவு கொண்ட பேராசிரியர்கள் , மற்றும் உயர் நிலை மனிதர் நம்புவதால் மற்றவரும் நம்பி வாழ்வை இழக்கிறார்கள்

    ReplyDelete
  2. நன்றி தோழர்... பறக்கட்டும் தீப்பொறி...
    Click here.. My Wishes!

    ReplyDelete
  3. ஏன் வாக்களிக்க முடியவில்லை ?

    ReplyDelete
    Replies
    1. வாக்கு பதிவாகிறது. ஆனால் உங்களின் வாக்கு ஏன் பதிவாகவில்லை என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.

      Delete
  4. நாளை வலைச்சரத்தில் [ http://blogintamil.blogspot.in]உங்கள் வலைத்தளத்தை அறிமுகபப்டுத்துகிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    மனோ சாமிநாதன்
    www.muthusidharal.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. இன்றுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! வலைச்சரத்தில் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்!

      Delete