தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13
மற்ற நாட்டினரைவிட தங்கள் உயர்வை வலியுறுத்த இந்துக்கள் எடுத்துக்கூறும் சிறப்பம்சங்களில் ஒன்று
இந்தியாவில் இந்துக்களில் அடிமைத்தனம் இருக்கவில்லை என்பதும் தீண்டாமையைவிட மிகக்
கொடூரமானது அடிமைத்தனம் என்பதும் ஆகும்.
முதலில்
கூறப்பட்ட கூற்றே உண்மையல்ல. அடிமை முறை மனுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதர
மனுஸ்மிருதி ஆசிரியர்களும் இதை விரிவுபடுத்தி ஒழுங்குபடுத்தி உள்ளனர். 1843 ஆம்
ஆண்டு வரை இந்திய வரலாற்றில் அடிமை முறையைத் தொடர்ந்து காண முடிகிறது. அந்த ஆண்டு
பிரிட்டிஷ் அரசு அதை ஒழித்திராவிட்டால் இன்றும் தொடர்ந்து அது வழக்கத்தில்
இருந்திருக்கும் அடிமைத்தனம் இருந்த வரை தீண்டப்படாதவர்கள், தீண்டப்படுபவர்கள்
ஆகிய இருவரையுமே அது பாதித்தது.
அடிமைத்தனத்தை
ஒப்பிடும் போது தீண்டாமை ஒன்றுமேயில்லை, அமெரிக்காவிலுள்ள் ஒரு நீக்ரோவும்,
இந்தியாவிலுள்ள தீண்டப்படாதவர் ஒருவரையும் ஒப்பிடும் போது தனது முடிவே சரி-யானது
என்பதுதான் லாலா லஜபதிராயின் கருத்தாக இருந்தது.
அடிமைத்தனத்தைவிட
தீண்டாமை தீங்கற்றதா? தீண்டாமையைவிட அடிமைத்தனம் வளர்ச்சியை பாதிக்கிறதா? அடிமைத்தனத்துக்கும் தீண்டாமைக்கும் உள்ள
வேறுபாட்டை புரிந்து கொண்டால் மட்டுமே அடிமைத்தனம் என்பதற்கான பொருளை தெளிவாக புரிந்து கொள்ள
முடியும்.
கணவனின்
முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கம் மனைவியை அடிமை என்கிறோம். நிலத்தில்
பிணைக்கப்பட்டிருக்கும் வேலையாளை பண்ணையடிமை என்கிறோம். இங்கே இவர்களின்
சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதால் இது அடிமைத்தனம் போலாகிறது. சாதாரண
மனிதர்களின் பார்வையில் ஒரு நபர் மற்றவர்கள் உடமையாகும் போது அடிமை என்று
அழைக்கப்பபடுகிறான் அடிமை ஒருவன் எஜமானனின் சொத்து என்றால், அதன் பொருள் எஜமானன்
அடிமையிடம் அவன் விருப்பத்திற்கு மாறாக வேலை வாங்க முடியும் அவனை அடமானம் வைக்கவோ,
குத்தகைக்க விடவோ முடியும் அவனைக் கொல்வதுகூட சாத்தியமே. சட்டத்தின் பார்வையில் அடிமை
என்பவன் வெறும் ஜடப் பொருளே. அதை எஜமானன் எந்த விதத்திலும் தன் விருப்பம் போல
கையாள முடியும்.
பார்ப்பதங்கு
தீண்டாமையைவிட அடிமைத்தனம் மிகக் கொடூரமாகத்தான் காணப்படும். ஓர் அடிமையை விற்கவோ,
அடகு வைக்கவோ, குத்தகைக்கு விடவோ முடியும். ஆனால், ஒரு தீண்டப்படாதவரை விற்கவோ,
அடமானம் வைக்கவோ, குத்தகை்கு விடவோ முடியாது.
அடிமை
என்பவன் யார்?
ஓர்
அடிமை என்பவன் யார் என்பதை சட்ட ரீதியாகவும், துள்ளியமாகவும் புரிந்து கொள்ள
வேண்டும். சட்டத்தின் பார்வையில் அடிமை என்பவன் ஒரு நபர் என்று கருதப்படாத மனிதன்
ஆவான். நபர் என்ற சொல் மனிதன் என்ற சொல்லுக்கு இணையானது. சட்டம் நபர்களாக
அங்கீகரிக்காத மனிதர்கள் சட்டத்தில் இருக்கலாம். மாறாகச் சட்டத்தில் மனிதரல்லாத
நபர்கள் இருக்க முடியும்.
ஓர்
அடிமை மனிதனாக இருப்பினும் சட்டத்தின் பார்வையில் அவன் ஓர் நபர் அல்ல. ஆனால் சிலை
மனிதனாக இல்லாவிடினும் ஒரு நபர் என்று சட்டம் அங்கீகரிக்கிறது.
ஜடப்
பொருள் மீதான உரிமை
ஜடப்
பொருள் மீதான உரிமை, அதைப் பெறுவதற்கான உரிமை, அதை அனுபவிப்பதற்கான உரிமை, அதை
விற்பதற்கான உரிமை என்பது சொத்து சம்பந்தமான உரிமைகளாகும்.
ஜடப்பொருளின்
மீதான இந்த உரிமைகளைவிட மேலும் அதிக முக்கியத்தவம் வாய்ந்த உரிமைகள் ஒரு நபர் என
அங்கீகரிக்கப்படும் நபருக்கு உள்ளன.
ஒரு
நபருக்கான உரிமைகள்
- சொந்த உடலின் மீதான உரிமை – சரியான சட்ட நடவடிக்கை இல்லாமல்
ஒருவன் கொல்லப்படாமல், முடமாக்கப்படாமல், காயப்படுத்தப்படாமல் இருப்பதறகான உரிமையை
அவனது வாழ்க்கைக்கான உரிமை என்கிறோம்..
சரியான சட்ட நடவடிக்கைகளில்லாமல் ஒருவன்
சிறையில் அடைக்கப்படாமலிருப்பதற்கான உரிமையைச் சுதந்திரத்திற்கான உரிமை என்கிறோம்.
- நற்பெயர் தொடர்பான உரிமை – மற்றவர்களால் பரிகசிக்கப்படுவதிலிருந்தும் மற்ற மனிதர்களின் பார்வையில் அவன் மதிப்பு இழப்பு ஏற்படாமல் இருத்தல், அவனது நற்பெயருக்கான உரிமை – மற்றவர்கள் அவன் மீது கொண்டுள்ள நற்பெயருக்குக் கேடு அளிக்காத உரிமை.
- அதிகாரங்களையும்
சுதந்திர நடவடிக்கைகளையும் தங்கு தடையின்றி செயல்படுத்தும் உரிமை - எல்லாச் சட்டபூர்வமான
நடவடிக்கைகளையும் எந்தவிதத் தடையுமின்றி நிறைவேற்றவும் ஒரு நபர் என்ற
முறையில் தனக்குரிய எல்லாவிதச் சலுகைகளை அனுபவிக்கவும் ஒவ்வொரு நபருக்கும்
உரிமையுள்ளது.
இதில் தன் வாழ்க்கைத் தேவைக்காகத் தேர்ந்தெடுத்துள்ள
தொழிலைத் தங்குதடையின்றி நடத்தும் உரிமை மிகவும் குறிப்பிடத்தக்க உரிமையாகும்.
இதே போல் பொது போக்கவரத்துச் சாலைகள்,
நீர்வழிப் போக்குவரத்து, பொதுநலச் செவை மையங்கள் ஆகியவற்றை உபயோகிக்கும் உரிமை
ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மனிதர்கள் யாவரையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட
சட்ட எந்திரம், அவனுக்கு பாதகமாக விரோதமாக, தீயநோக்கத்துடன் செயல்படாமல் இருக்கும்
உரிமை இதனுடன் அடங்கும்.
- வலுக்கட்டாயத்தினால்
மற்றும் மோசடியினால் ஏற்படும் இழப்பிலிருந்து சட்டப் பாதுகாப்புக்கான உரிமை – மோசடியான செயல்கள் மூலம் ஒரு
நடவடிக்கைக்கு இசைவு தெரிவிக்கத் தூண்டிவிட்டு அதன் மூலம் இழப்பு
ஏற்படுத்துவது, விருப்பதிற்கு எதிராக செயல்பட பலாத்காரமாக ஒருவனைக்
கட்டாயப்படுத்துவது ஆகியவைகளிலிருந்து சட்ட பாதுகாப்பு பெறவும் ஒருவனுக்கு
உரிமை உண்டு.
- குடும்ப உரிமைகள் – திருமணம் தொடர்பான உரிமைகள்,
பெற்றோர் தொடர்பான உரிமைகள், பாதுகாப்பு தொடர்பான உரிமைகள் இதில் அடங்கும்.
வன்முறை மூலமோ, ஆசைகாட்டுவதன் மூலமோ மனைவியுடனான
கணவனுடைய உறவைப் பறிப்பது, தீய நோக்கத்துடன் அவளுடன் நெருக்கம் கொள்வது ஆகியவைகளிலிருந்து
பாதுகாப்பு முதலியவை கணவனின் உரிமையான குடும்ப உரிமையாகும்.
சட்டத்தைப்
பொருத்தவரையில் ஓர் அடிமை ஒரு நபர் என்று கருதப்படாததால் இந்த உரிமைகள் எதையும் பெற
முடியாது. சட்டத்தின் பார்வையில் தீண்டப்படாதவர் ஒர நபர் என்றெ கருதப்படுகிறார்.
எனவே ஒரு நபருக்கு சட்டம் அளிக்கும் இந்த உரிமைகள் எதுவும் தீண்டப்படாதவருக்கு
இல்லை என்று கூற முடியாது.
சொத்துரிமை,
தன் உயிரை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, செல்வாக்குக் கேடுவராமல் பாதுகாத்துக்
கொள்ளும் உரிமை, குடும்ப உரிமை, தன் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும்
தங்குதயைின்றிப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை ஆகிய எல்லா உரிமைகளும் தீண்டத்தகாதவர்களுக்கு
உள்ளன.
ஒர்
அடிமை வெறும் சொத்தாக அங்கீகரிக்கும்போது அல்லது நபராக அங்கீகரிக்கப்படாதபோது
தீண்டப்படாதவர்களைவிட அவர்கள் நிலை மிகப் பரிதாபகரமாகத்தான் தோன்றும்.
(ஆதாரம்:
பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)
தொடரும்
தொடர்புடைய பதிவுகள்:
ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை
பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12
நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!
..... தொடர்: 11
வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!
தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை
பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10
தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை
புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9
பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்?
தீண்டாமையை
புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
No comments:
Post a Comment