Thursday, September 10, 2015

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கான சட்ட உரிமைகள்!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15


"தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!" என்கிற இந்தத் தொடரை முடித்துவிடலாம் எனக் கருதியபோது தீண்டாமை என்பது வாழ்ந்துவரும் கடந்த காலமாக இந்தியாவெங்கும் தொடர்கிறது என்பது மட்டுமல்ல தீண்டாமை மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கான நிகழ்வுகள் அன்றாடம் அறங்கேறி வருகின்றன. அதனால் மேலும் சில செய்திகளைத் தொகுத்து தொடரை முடிக்கலாம் எனக் கருதுகிறேன்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹோலேனாசிபூர் வட்டத்தில் உள்ள சிகரணஹள்ளி கிராமம் எச்.டி.தேவகவுடாவின் சொந்த ஊரான ஹாரண்டஹள்ளியிலிருந்து 2 கி.மீ.தொலைவில் உள்ள ஓர் ஊர். இவ்வூரில் 20 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் “ஸ்ரீபசவேஸ்வரா ஸ்ட்ரீ சக்தி சங்கா” என்கிற சுயஉதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆகஸ்டு 31ந்தேதி அன்று தாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீபசவேஷ்வரா கோவில் சிறப்பு பூஜையின் போது இந்த சுயஉதவிக்குழவைச் சேர்ந்த 9 ஒக்கலிக சாதிப் பெண்களுடன் 4 தலித் பெண்களும் கோவிலுக்குள் சென்றுள்ளனர். தலித் பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என ஒக்கலிக சாதியைச் சேர்ந்த தேவராஜா என்பவர் எதிர்த்துள்ளார்.

மறுநாள் ஆதிக்கச் சாதியினர் ஒன்றுகூடி கூட்டம் நடத்தி சுயஉதவிக்குழுவிற்கு ரூ.1000 அபராதம் விதித்ததோடு, தலித் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு தீட்டுபட்டுவிட்டதாகக்கூறி தீட்டுக்கழிப்பு சடங்கினை சுயஉதவிக் குழுவினரே செய்ய வேண்டும் என் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.

கோவில் திருவிழாவிற்கு தாங்களும் பணம் கொடுத்துள்ளதால் கோவிலுக்குள் நுழைய முழு உரிழமை தங்களுக்கு உண்டு எனக்கூறி அபராதத் தொகையை செலுத்த முடியாது என தலித் பெண்கள் மறுத்துள்ளனர்.

ஸ்ரீபசவேஷ்வரா கோவிலுக்குள் தலித் பெண்கள் நுழைந்தது குறித்து கேள்வி எழுப்பும் ஆதிக்கச் சாதியினரை கடும் வெஞ்சினத்தோடு எதிர்க்கிறார் 60 வயதை நெருங்கும் ஹரிஹர்பூர் கிராம பஞ்சாயத்து உறுப்பிராக இருந்த தாயம்மா.

சில ஆண்டுகளுக்கு முன்பு “ஹாசன் ஜில்லா பரிசத்” மூலமாக எச்.டி.தேவகவுடா அவர்கள் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் அந்தக் கோவிலில், அனைவருக்கும் பயன்படும் வகையில் சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் அது தற்போது ஒக்கலிக பவனாக மாற்றப்பட்டு அச்சமுதாயக் கூடத்திற்குள் தலித்துகள் நுழைவதை தடுத்து வருகின்றனர் ஒக்கலிக சாதியினர்.

2001ல் தாயம்மா, தனது மகளின் திருமணத்தை நடத்திக்கொள்ள சமுதாயக்கூடத்தைத் தருமாறு அணுகிய போது முதலில் வாடகைக்குத் தர ஒப்புக் கொண்டு, பிறகு சாவியைக் கொடுக்க மறுத்தவிட்டனர். வேறு வழியின்றி பல்வேறு சிரமங்களுக்கிடையில் தனது வீட்டு வாசலிலேயே தனது மகள் திருமணத்தை நடத்தியுள்ளார் தாயம்மா.

அதே போல ஆதிக்கச்சாதியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றின் போது சமுதாயக்கூடத்திற்குள் சிறுவன் ஒருவன் நுழைந்துவிட்டதாகக் கூறி அவன் தலித் என்ற ஒரே காரணத்திற்காக அங்கிருந்து அடித்துவிரட்டப்பட்டுள்ளான்.

தலித்துகள் தங்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வேறு இடம் எதுவும் கிடையாது என்பதாலும், சமுதாயக்கூடம் அரசின் நிதியில் கட்டப்பட்டது என்பதாலும் சமுதாயக்கூடத்தில் நுழைவதற்கு தலித்துகளுக்கு முழு உரிமை வேண்டும் என்கிறார் பத்மம்மா என்கிற தலித் பெண்.

கோவிலுக்குள்ளும் சமுதாயக்கூடத்திற்குள்ளும் தலித்துகள் நுழைவதை தடுப்பது சட்ட விரோதம் எனவும், விவரங்கள் கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடக்கப்படும் எனவும்  மாவட்ட சமூக நல அலுவலர் N.R.புருஷோத்தம் அறிவித்திருந்தாலும் அக்கோவிலில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை நிறுத்தப்படுமா என்பது ஐயத்திற்குரியதே! அம்பேத்கர் மொழியில் சொல்வதானால்---
சில சமயம் சட்டத்தைவிட மக்கள் (ஆதிக்கச் சாதியினர்) கருத்து வலிமை பெற்றிருக்கிறது; சட்டத்தின் கடுமையைக் குறைப்பதுடன் அதை வலுவிழக்கச் செய்கிறது. --- சில சமயங்களில் பொதுமக்கள் (ஆதிக்கச் சாதியினர்) கருத்து பலம் பெற்று சட்ட வழிமுறைகளை ஒதுக்கித் தள்ளி அவற்றை செயலற்றதாகவும் ஆக்கிவிடுகிறது.
சட்டப்படி தீண்டப்படாதவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆளுமை சமூகத்தால் மறுக்கப்படுகிறது.
ஏனெனில் இந்துச் சமூகம் தீண்டப்படாதவனை அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தீர்மானகரமாக இருக்கிறது.

தலித்துகளுக்கு உள்ளதாகச் சொல்லப்டும் சட்ட உரிமைகள் அனைத்தும் ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகி விடுகிறது என்பதே யதார்த்தம்.

(செய்தி ஆதாரம்: THE HINDU: 07.09.2015)

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்:

எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

No comments:

Post a Comment

There was an error in this gadget