திருச்சியில் ஒரு ஒற்றைக் குடிசையில் கனன்ற சிறு நெருப்பு இன்று பெருங்காட்டுத் தீயாய் இருபத்துநாலு மணி நேரமும் சந்து சந்தாய், தெருத் தெருவாய், ஊர் ஊராய் மக்களைக் கடித்துக் குதரும் ஓநாய்களை சுட்டுப் பொசுக்கி வருகிறது.
இதுவரை ஊளையிட்ட ஓநாய்கள் இந்த பெருங்காட்டுத்தீயைக் கண்டு அலருகின்றன. காட்டுத்தீ நாலாபுறமும் சுழன்று சுழன்று அடிப்பதால் காட்டுத் தீயைக் கட்டிப்போட இலவம் பஞ்சில் கயிறு திரிக்கின்றன ஓநாய்கள்.
ஓநாய்களால் கடிபட்ட மக்களோ, ஓநாய்களின் அலரல் சத்தம் கேட்டு குதூகலிக்கின்றனர்; கொண்டாடுகின்றனர். தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழர்களின் இந்த குதூகலத்தை ஏழு மலை தாண்டி, கடல் தாண்டி உள்ளோரும் கண்டு மகிழ்கின்றனர்.
இந்த மகிழ்ச்சிக்கு வித்திட்ட கோவனை தமிழகம் கொண்டாடாதா என்ன?
காட்டுத் தீயில் கருகி குற்றுயிரும் குலையுருமாய் அலையும் ஓநாய்கள் எந்நேரமும் நம்மைக் குதர வரலாம். திருச்சி ஒற்றைக் குடிசையில் கனன்ற நெருப்பு இனி வீடு தோரும் கனன்று கொண்டிருக்கட்டும்.
வீடியொ: நன்றி வினவு
No comments:
Post a Comment