கோவனோ கீவனோ யாரோ ஒரு ஆசாமியைக் கைது பண்ணியிருக்கிறார்கள்.
அந்த ஆள் ஏதோ சீர்திருத்தவாதி போலவும், அரசாங்கம் அராஜகம் பண்ணிவிட்டது போலவும் பல பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட பாடல்களைக் கேட்டுப் பார்த்தேன். மகா அநாகரிகமாகவும், வன்முறை தூண்டுவதாயும், கலக்டரின் அதிகாரங்களை கேள்வி கேட்பதாயும், முதல்வர் பிரதமரை எல்லாம் அசிங்கப்படுத்துவதாயும்
வரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
விவரம் தெரியாமலே கொந்தளிக்கும் ஆசாமிகள் தயவுசெய்து விவரம் தெரிந்து கொள்ளுங்கள். விவரம் தெரிந்தும் கொந்தளிக்கிறவர்கள்
யாரென்று சொல்லுங்கள், நான் விலகிக் கொள்ள சௌகர்யமாக இருக்கும்.
பிடிக்காத அரசாங்கமாய் இருந்தால் பிக்பாக்கெட், கொலைகாரன், கொள்ளைக்காரன், கற்பழித்தவன் யாரை அரஸ்ட் செய்தாலும் எதிர்ப்பேன் என்கிற ஸ்டாண்ட் ரொம்பத் தவறானது. இப்படியே போனால் பாகிஸ்தான் போருக்கு வந்தால் அவன் பக்கம் சேர்ந்தாலும் சேர்ந்து கொள்வார்கள் நம் மக்கள்.
Comments
ooran.......mama velai super...
ReplyDeleteஎதையும் இட்டுக்கட்டவில்லை. உள்ளதைத்தான் சொல்லியிருக்கிறேன். இதில் மாமா வேலை எங்கிருக்கிறது அனானி அவர்களே!
Delete