Thursday, September 14, 2017

எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி! தொடர்-2

ஆளும் தமிழ் மன்னர்கள் அன்று சூத்திரர்களாக்கப்பட்டதற்கும்; சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?

மனிதன் கடவுளின் அடிமைதானே! அப்படிதானே மக்கள் கருதுகிறார்கள். எனவேதான் மக்கள் கடவுளை சாமி என்று அழைப்பதோடு கடவுளை தெண்டனிட்டு வணங்கவும் செய்கிறார்கள்.  ஆனால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை சாமி என்று அழைத்தால் அதற்கு என்ன பொருள்? அவனை வணங்குவதாகத்தான் பொருள்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை சாமி என்றுதான் மக்கள் விளித்தனர்; விளித்ததோடு வணங்கவும் செய்தனர். இன்றும்கூட பார்ப்பனர்களை சாமி என்று விளிப்பதும் வணங்குவதும் தொடரத்தான் செய்கிறது.

இந்து மதத்தைப் பொருத்தவரை இந்து மதக் கடவுளர்களை ஒருவன் வணங்குகிறான் என்றால் அவன் இந்து மத வேதங்களை வணங்குகிறான் என்று பொருள்.

மனிதர்களில் வேதம் ஓதும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் (மனு: 1:97) என மனு விதி வகுத்ததால் பார்ப்பனர்களை வணங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பார்ப்பனர்களை வணங்காமை என்பது வேதத்தை மதிக்காததற்கு ஒப்பாகும். வேதங்களை மதிக்கவில்லை என்றால் கடவுளையே மறுப்பதாகும். அதனால்தான் கடவுளுக்கு கொடுக்கிற மரியாதையை வேதங்களும், வேதங்களுக்கு கொடுக்கும் மரியாதையை வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டது.

எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?

பார்ப்பனர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன? அவர்களை சாமி என்று அழைப்பதோடு நிற்கவில்லை. நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சி நீடிக்க வேண்டும் எனில் பார்ப்பனர்களின் ஆலோசனைப்படிதான் ஆட்சி நடத்த வேண்டும்; நீதி செலுத்த வேண்டும். (மனு: 7-38).

நியாயம் எது என்று ஆட்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அந்த நியாயத்தை பார்ப்பனர்களிடத்தில்தான் அவர்கள் வணங்கிக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் அவர்கள் ஆட்சியை இழக்கமாட்டார்கள். (மனு:7-39). அப்படிக் கேட்பதால்தான் இன்னமும் எடப்பாடி அரசு நீடிக்கிறதோ!.

பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்கள் அரசை இழப்பார்கள். (மனு: 7-40). பார்ப்பனர்களை வணங்காததால்தான் வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி போன்ற அரசர்கள் அழிந்து போனார்கள். (மனு:7-41).

பார்ப்பனர்களை எதிர்ப்பதால்தான் சூத்திரர்கள் ஆட்சிக்கு வந்தால் அதை அழிப்பதற்கும்; ஆட்சிக்கு வர முயன்றால் வரவிடாமல் தடுப்பதற்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார்கள். இன்றை தமிழக அரசியல் இதற்குப் பொருந்துகிறதோ!

குடி-கும்மாளம், பாட்டு-கூத்து, துரோகம்-பொறாமை, பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தல், குடி-கூத்தி என ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால் அவர்கள், நீதி சாஸ்திரம், வேதாந்தம், தநுர் வேதம் இவைகளையறிந்தவர்களை (பார்ப்பனர்களை) ஆலோசனை சொல்வதற்கு வைத்துக் கொள்ள வேண்டியது. (மனு: 7-47 முதல் 54 வரை).

இவர்களிடத்தில் (பார்ப்பனர்களிடத்தில்) சண்டை-சச்சரவுகள்-சமாதானம் குறித்து ஆலோசிக்க வேண்டியது. (மனு: 7-56)

இவர்களிடத்தில் (பார்ப்பனர்களிடத்தில்) தினந்தோறும் நம்பிக்கையுடன் சகலத்தையுஞ்சொல்லி அவருடன் யோசித்து ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டியது. (மனு: 7-59)

ஈ.பி.எசும்-ஓ.பி.எசும் முட்டி மோதிக் கொண்டதும், இன்று சமாதானம் ஆனதும், இந்த எடுபிடிகளின் ஆட்சி நீடிப்பதும், தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் நீடிப்பதும், கிரிஜா உள்துறைச் செயலாளர் ஆனதும் தற்செயலானதோ!

மேட்டூர் அணை இந்த ஆண்டாவது நிரம்பாதா, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்து விடுவார்களா என ஏக்கத்தோடு காத்திருக்கும் வேளையில்தான் மகா புஷ்கரத்தையொட்டி பார்ப்பனர்கள் தங்களின் அழுக்கைக் கழுவ மேட்டூரிலிருந்து விநாடிக்கு 10000 கன அடி தண்ணீரை ஒரு வாரத்திற்கு தமிழக அரசு திறந்து விடுகிறது என்றால் இந்த அரசு யாருடைய ஆலோசனைப்படி, யாருக்காக செயல்படுகிறது என்பதை என்னவென்பது?


யாருக்காக இந்த மகா புஷ்கர விழா?

பார்ப்பனர்களின் ஆலோசனை இல்லாமலா  நீட் தேர்வு, ஹைரோ கார்பன் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் உள்ளிட்ட பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு தமிழக எடுபிடி அரசு ஒப்புதல் கொடுத்தது? 

பார்ப்பனர்களை வணங்கவில்லை எனில்….

பார்ப்பனர்களை வணங்காத காரணத்தினால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம்  ஆசிய நாடுகளை ஆண்ட சத்திரியர்கள் எல்லாம் சூத்திர நிலைக்கு தள்ளப்பட்டார்கள். (மனு: 10-43 & 44).

அரசனே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு சாமான்ய சூத்திர மக்களுக்கு கல்வி கிடைத்திருக்குமா? அடுத்த தொடரில் பார்க்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்:

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

4 comments:

  1. அருமையான கிடைத்தற்கரிய விசயங்களை எழுதியமைக்கு நன்றி

    ReplyDelete