Tuesday, June 10, 2014

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!

 தமிழக மீனவர்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்றும் கைது விவகாரம் மோடி அரசிலும் தொடர்வது , 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அனந்தகுமார் மற்று வெங்கைய்ய நாயுடு ஆகிய நடுவண் அமைச்சர்களின் தமிழகத்திற்கு எதிரான பேச்சு, 

போன்ற தமிழக மக்களின் நலன் சார்ந்த விசயங்களிலும்-

மாதாந்திர டீசல் விலை உயர்வைத் தவிர்க்க வாய்ப்பில்லை என்கிற பெட்ரோலியத் துறை செயலாளரின் அறிவிப்பு,

இரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்கிற நடுவண் அமைச்சரின் அறிவிப்பு,

போன்ற ஒட்டு மொத்த இந்திய மக்களின்  நலன் சார்ந்த விசயங்ளிலும்,

தேர்தலுக்கு முன்புவரை காங்கிரஸ் அரசுக்கு எதிராக தொலைக்காட்சி ஊடகங்களில் உச்சஸ்தாயில் உதார் விட்ட ராகவன், கல்யாணராமன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க வின் தமிழக முன்கள வீரர்கள் 

இன்று

"உங்களுடைய அணுகுமுறை 'புதிய மொந்தையில் பழைய கள்ளு'! என்பதாகத்தானே உள்ளது?" என்று ஊடகங்களில் எழுப்பப்படும் சரமாரியான கேள்விக் கணைகளை எதிர்கொள்ள முடியாமல், முகம் வெளிறி, எச்சிலை விழுங்கி, முக்காடிட்டு, முகம் தொங்கிப் போய் உட்கார்ந்திருக்கும் காட்சிகள்  இருக்கிறதே! அடடா! கண் கொள்ளாக் காட்சி!

இப்படம் இன்றே கடைசி அல்ல! இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றாலும் பிரேமுக்கு பிரேம் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்து இருப்பதால் "பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!" என்கிற திரை ஓவியத்தை அன்றாடம் தொலைக்காட்சி ஊடகங்களில் கண்டு களிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!

கட்டணம் ஏதும் இல்லை! அனுமதி இலவசம்!!

2 comments:

  1. பா ஜா கா மே 21ஆம் தேதி ஆட்ச்சிக்கு வந்தது, இல்லையா? பத்து வருடங்களாக காங்கிரஸ் செய்யாததை இவர்கள் பத்து நாட்களில் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம் இல்லை? கொஞ்ச நாள் அவர்களுக்கு கொடுக்கலாமே!

    ReplyDelete
  2. பத்து நாட்களில் செய்ய வேண்டும் என யாரும் எதிர்பார்க்க முடியாதுதான். நானும் எதிர்பார்க்கவில்லை. இப்போதைக்கு செய்ய முடியாததை பிறகுகூட நிறைவேற்றலாம். ஆனால் இன்றைய அரசியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் பா.ஜ.க தலைவர்களிடையே நிலவும் தடுமாற்றத்தை வெளிப்படுத்துவதுதான் பதிவின் நோக்கம். கொஞ்ச நாள் அல்ல; கொஞ்சம் மாதங்களேகூட கொடுக்கலாம். முதல் கோணல் முற்றிலும் கோணலாகிறதா இல்லை நிமிர்கிறதா என பிறகு பார்ப்போம். நன்றி!

    ReplyDelete