Wednesday, March 11, 2015

மகாராஷ்டிர அரசும் மாட்டிறைச்சிக்குத் தடையும்!

"உயர் சாதிக்காரன் கீழ்சாதிக்காரர்களை வதைக்கிறான். பணக்காரன் ஏழைகளை வதைக்கிறான். முதலாளி தொழிலாளியை வதைக்கிறான். மாமியார் மருமகளை வதைக்கிறாள். காவல் துறை மக்களை வதைக்கிறது. ஜெயா அரசு மக்கள் நலப் பணியாளர்களை வதைக்கிறது. ஆப்கானை வதைத்து ஈராக்கை வதைத்து-லிபியாவை-வதைத்து தற்போது ஈரானை வதைக்கத் திட்டம் போட்டு வருகிறது அமெரிக்கா."

ஆளுமையையும், அதிகாரத்தையும், சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டே இப்படிப்பட்ட மனித வதைகள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

இப்படி அன்றாடம் அரங்கேறி வரும் மனித வதைகளைக் கண்டு கொள்ளாதவர்கள் பசுவதையை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்? பசுக்களை இந்துக்கள் புனிதமாகக் கருதுவதால் கொல்லக் கூடாது என்கிறார்களா? இஸ்லாமியர்கள் பசுக்களைக் கொன்று தின்கிறார்கள் என்பதற்காக எதிர்க்கிறார்களா? உயிர்களைக் கொள்வது பாவம்-உயிர் வதை பாவம் என்பதற்காக பசு வதையை எதிர்க்கிறார்களா?”

மகாராஷ்டிரா அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ள சூழலில் மேலும் விரிவாக - பாலும் பசுவதையும்! - மீள் பதிவு

4 comments:

  1. சிந்திக்க வைக்கும் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. //இஸ்லாமியர்கள் பசுக்களைக் கொன்று தின்கிறார்கள் என்பதற்காக எதிர்க்கிறார்களா?//
    உலகில் இந்துக்கள் பலர் மாட்டிறைச்சியை உண்கிறார்கள். இந்தோனேசிய இந்துக்கள் இந்து புனித நாட்களில் பசுவைக் கொன்று , அதை இறைவனுக்கு (சிவன், விஷ்ணு) படைத்த பின் குடும்பத்துடன், பூசகரும் சேர்ந்து (நம்ம மொழியில் ஐயர்)
    உண்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் தகவல்களுக்கு நன்றி!

      Delete