Tuesday, June 11, 2024

பூணூல் கல்யாணம் ஆண்களுக்கு மட்டும் ஏன்?

வாட்ஸ்அப் குழுவில்...

கேள்வி: 

பூணூல் கல்யாணம் ஆண்களுக்கு மட்டும் எதற்காக செய்யப்படுகிறது என்ற கேள்வி எனக்கு நீண்ட காலமாக உள்ளது. தெரிந்தவர்கள்  விளக்கினால் நன்றி பாராட்டுவேன்.

பதில்:

இந்து மதத்தின் கோட்பாட்டு நூலான மனுதர்ம சாஸ்திரத்தில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் நான்கு வருணங்களாக பகுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

முதல் மூன்று வருணங்களான பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய வருணங்களைச் சார்ந்த ஆண்கள் பூணூல் அணிய உரிமை உண்டு. சூத்திரர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எந்த வருணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களும் சூத்திரர்களே என்கிறது மனுதர்ம சாஸ்திரம். எனவே பெண்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது.

முதல் மூன்று வருணத்தார் இருபிறப்பாளர்கள் (துவிஜர்கள்). உபநயநம் என்று சொல்லக்கூடிய பூணூல் அணியும் நிகழ்ச்சி நடப்பது என்பது இரண்டாவது பிறப்பாக கருதப்படுகிறது. உபநயநம் செய்து கொண்டால்தான் அவன் அந்த வருணத்துக்குரியவன் ஆகிறான். உபநயநம் செய்து கொள்ளவில்லை என்றால் அவன் சூத்திர நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான். சூத்திரர்களுக்கு இரண்டாவது பிறப்பு கிடையாது. பெண்களுக்கும் கிடையாது.

இந்தப் பூணூல் அணிவதில்கூட கூட மூன்று வருணத்தாருக்கிடையில் பல்வேறு வேறுபாடுகள் உண்டு.

இந்து மத சாஸ்திரப்படி தற்போது நடைபெறும் காலம் கலியுகம். கலியுகத்தில் பிராமணர்கள் சூத்திரர்கள் என்ற இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு. எனவே, இன்றைய காலகட்டத்தில் சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய வருணங்கள் கிடையாது என்பதாலும், இருக்கின்ற இரண்டு வருணங்களில் சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது என்பதனாலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. 
பூணூல் அணிய உரிமை கேட்டு விஸ்வகர்மாக்கள் போராடிய சமீபத்திய வரலாறுகளும்  உண்டு. 

மனுதர்ம சாஸ்திரத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கிக் கொள்வதும், அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் எப்படி நடைமுறையில் இன்றும் தொடர்கிறது என்பது குறித்தப் புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும், பார்ப்பனியம் மேலாதிக்கத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது.

விரிவஞ்சி நான் மிகச் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன். நான் சொல்லி உள்ள எல்லாவற்றிற்கும் மனுதர்மத்தில் ஆதாரங்கள் இருக்கிறது.

ஊரான்

2 comments:

  1. எந்த வருணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களும் சூத்திரர்களே என்கிறது மனுதர்ம சாஸ்திரம்.

    சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த சண்டாளன் என்கிற பறையர் சாதியின் பிறப்பு, மிகவும் சிக்கல் வாய்ந்தது என்பதால், சமூகத்தின் இழி நிலைக்கு அவனைத் தள்ளிவிட்டதோடு, இழிவான தொழில்களையே செய்ய வேண்டும், என அவன் கட்டாயப்படுத்தப்பட்டான்.

    அனைத்து வருணப் பெண்களும் சூத்திர வருணம் என்றால் பிராமணப் பெண் எங்கிருந்து வந்தாள்.

    ReplyDelete
  2. எந்த வருணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களும் சூத்திரர்களே என்கிறது மனுதர்ம சாஸ்திரம்.

    சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த சண்டாளன் என்கிற பறையர் சாதியின் பிறப்பு, மிகவும் சிக்கல் வாய்ந்தது என்பதால், சமூகத்தின் இழி நிலைக்கு அவனைத் தள்ளிவிட்டதோடு, இழிவான தொழில்களையே செய்ய வேண்டும், என அவன் கட்டாயப்படுத்தப்பட்டான்.

    அனைத்து வருணப் பெண்களும் சூத்திர வருணம் என்றால் பிராமணப் பெண் எங்கிருந்து வந்தாள்.

    ReplyDelete