Saturday, August 15, 2015

‘நமஸ்காரம்’ சொல்லத் தடை!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7

”மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகரமாக இருந்த புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், ஒன்பதுக்கு முன்பும் மூன்றுக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள் நீண்ட நிழல்களை ஏற்படுத்தியதே இதற்குக் கதாரணம். இந்த நீண்ட நிழல்கள் ஒரு பிராமணரின் மீது பட்டுவிட்டால் அவர் குளித்து தனது தீட்டைப் போக்கிய பிறகே உணவு அருந்தவோ, தண்ணீர் குடிக்கவோ முடியும்.

“இதே போன்று மதில் சுவரால் அரண் செய்யப்பட்ட நகரங்களுக்குள், தீண்டப்படாதவர்கள் வசிக்க அனுமதிக்கப்படவில்லை. கன்று காலிகளும், நாய்களும் சுதந்திரமாக நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

“மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் சட்டப்படி தீண்டப்படாதவர்கள், தரையில் துப்புவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் எச்சிலை ஓர் இந்து மதித்தால் அவர் தீட்டுக்குள்ளாகக்கூடும். எனவே எச்சிலை துப்புவதற்காக தீண்டப்படாதவர் தன் கழுத்தில் ஒரு பானையை கட்டிச் செல்ல வேண்டுமென்ற விதி இருந்தது.

“தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டுமென்றும் இருந்தது.

“ஒரு பிராமணன் வருவது தெரிந்தால் தீண்டப்படாதவன் தரையில் குப்புறப்படுத்து தனது நிழல் பிராமணன் மீது விழுவதைத் தவிர்க்க வேண்டுமென்ற நிலையும் இருந்தது.

“ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கருப்புக் கயிறு அணிய வேண்டுமென்ற விதி மகாராஷ்டிராவில் நிலவி வந்தது.

“குஜராத்தில், தீண்டப்படாதவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டும் சின்னமாக, ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

“பஞ்சாபில், ஒரு தெரு கூட்டுபவன் தெருவில் நடந்து செல்லும் போது தான் ஒரு துப்பறவு பணியாளன் என்பதை வெளியார் அறிந்து கொள்ள தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.

“பம்பாயில், தீண்டப்படாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப்படவில்லை. கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்குத் துணிகள் விற்கும் போது, அந்தத் துணிகளை கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள்.

“மலபாரில், தீண்டப்படாதவர்கள் ஒரு மாடிக்கு அதிகமான மாடிகளுடன் வீடுகள் கட்ட அனுமதிக்கப்படவில்லை.

“குடை எடுத்துச் செல்லவும், காலணிகளை அணியவும், நகைகள் அணியவும், பசுக்களிடமிருந்து பால் கறக்கவும், நாட்டில் சர்வசாதாரணமாக புழங்கும் மொழியை உபயோகிக்கவும் மலபாரிலுள்ள தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

“தென் இந்தியாவில், தீண்டப்படாதவர்கள் இடுப்பிற்கு மேலே எந்தத் துணியும் அணியக்கூடாது என்ற திட்டவட்டமான விதியிருந்தது. திண்டப்படாத பெண்மக்களும் உடலின் மேற்பகுதியை மூட அனுமதிக்கப்படவில்லை.”

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் மன்னர் ஆட்சிக்காலத்தில் தீண்டப்படாதவர்கள் மீது வரைமுறையின்றி வன்கொடுமைகள் ஏவிவிடப்பட்டன என்பதை மேற்கண்ட விவரங்கள் உணர்த்துகின்றன.

இந்து மதத்தைச் சார்ந்த தங்களுக்குக் கீழானவர்களாக இருந்த பிற சாதிக்காரர்களையும் பார்ப்னர்கள்  விட்டு வைக்கவில்லை.

“பம்பாய் மாகாணத்தில் சோனர்கள் (பொற்கொல்லர்கள்) தங்கள் வேஷ்டியைத் தார்ப்பாய்ச்சி உடுத்திக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

“ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கையில் ‘நமஸ்காரம்’ என்ற சொல்லை உபயோகிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.”

இது குறித்து பம்பாய் மாகாண அரசு 28.07.1779ல் இயற்றிய தீாமானம்.

“வணக்கத்தைத் தெரிவிக்கும் முறைகளில் ஒன்றான, ‘நமஸ்காரம்’ என்பதைப் பொற்கொல்லர்கள் உபயோகப்படுத்துவது தவறு என்று பிராமணர்கள் தெரிவிப்பதுடன், பொற்கொல்லர்களுக்கு இதற்கு உரிமை இல்லை என்றும், இது இந்து மத உரிமைகளின் மீறல் என்றும், இதன்மூலம் அவர்கள் புனிதத் தன்மையை கெடுக்கிறார்கள் என்றும் பிராமணர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். பொற்கொல்லர்கள் ‘நமஸ்காரம்’ என்று வணக்கம் சொல்லும் முறையைத் தடை செய்ய வேண்டும் என்று பேஷ்வாவும் தலைவருக்கு எழுதியுள்ளார். இந்த இரண்டு சாதிகளுக்கும் இடையேயான தகராறைத் தீர்க்க வேண்டும் என்ற முடிவுடன், பிராமணர்களின் புகாரில் காரணம் இருப்பதாகத் தெரிவதால் பொற்கொல்லர்கள் ‘நமஸ்காரம்’ என்பதை உபயோகிக்கக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது.”

அதைத் தொடர்ந்து அரசுச் செயலாளர் பொற்கொல்லர்களின் சாதித்தலைவருக்கு கீழ்கண்டவாறு 09.08.1779ல் உத்தரவு கடிதம் ஒன்றையும் அனுப்புகிறார்.

“பொற்கொல்லர்கள் ‘நமஸ்காரம்’ என்று வணக்கத்தைத் தெரிவிப்பதை தடை செய்ய வேண்டும் என்று மேல் சபையின் மாண்புமிகு தலைவர் கருதுவதால், இந்த உத்தரவையும், தீர்மானத்தையும் அந்தச் சாதியினர் முழுவதுக்கும் அறிவிக்கவும், அது கண்டிப்பாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும் இவ்வாறு உங்களுக்கு உத்தரவிடப்படுகிறது”.

”கிறிஸ்து பிறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்போ அல்லது சில ஆண்டுகளுக்கு பின்போ மனு பிறந்திருந்தாலும் இந்த விவரங்கள் மனு இன்னும் மடிந்து விடவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

”இந்து அரசர்கள் ஆட்சியில் இருந்த போது, இந்துக்களுக்கும் இந்துக்களுக்குமிடையே, தீண்டப்படாதவர்கள் மற்றும் தீண்டத்தக்கவர்களுக்கும் இடையேயான உறவுகள் மனுவின் சட்டப்படி தீர்மானிக்கப்பட்டன. அந்த சட்டம் வெளிப்படையாகவே ஏற்றத்தாழ்வின் அடிப்படையில்தான் அமைந்து இருந்தது.”

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

குறிப்பு: சத்திரபதி சிவாஜி தனது ஆட்சிக்காலத்தில் (கி.பி:1664-1680) அரசவையில் பேஷ்வா எனும் அமைச்சர் பதவியை முதன் முதலில் உருவாக்கினான். மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்திய பேஷ்வாக்கள் பின்னர் வழிவழியாக மராட்டிய பேரரசுக்குத் தலைமை தாங்கி நடத்தினர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர்.

தொடர்புடைய பதிவுகள்:
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

2 comments:

  1. ஆஹா ! கேக்கவே தேன் பாய்கிறது காதில். இதில் இந்துத்துவாக்கள் இடையிடையே அம்பேத்க்ர் மேற்கோள்களை அள்ளித் தெளிக்கிறார்கள். என்னவோ அம்பேத்கர் இந்து மதத்துக்காவே வாழ்நாள் முழுதும் போராடியது போல்.

    ReplyDelete
    Replies
    1. அம்பேத்கரை முழுமையாகப் படித்தால் காதில் மட்டுமல்ல நாமே தேனில் மூழ்கிவிடுவோம். அம்பேத்கரை மேற்கோள் காட்ட இந்துத்துவாவாதிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது. இந்துத்துவாவாதிகளை எதிர்கொள்ள நமக்கு இருக்கிற சாட்டைகள் இரண்டு. ஒன்று அம்பேத்கர். மற்றொன்று பெரியார். பெரியார் சாட்டையை எடுத்தால்தான் பார்ப்பனர்களுக்கு பொத்திக் கொண்டு வருகிறதே!. அதனால் இப்போதைக்கு அம்பேத்கர் சாட்டை ஒன்று போதும்; அவர்களை ஓட ஓட விரட்ட!

      Delete