தீண்டாமையை
புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
”ஏற்றத்தாழ்வைதான் மனுதர்மம்
எடுத்துரைக்கிறது. இந்த மனு தர்மப்படி பிராமணர்களுக்கு எல்லாச் சலகைகளும் அளிக்கப்படுவதுடன்,
சூத்திரர்களுக்கு மனிதப்பிறவி என்ற உரிமைகூட வழங்கப்படவில்லை. பிராமணன் அவனது
உயர்ந்த பிறவியின் காரணத்தினால் மட்டுமே மற்ற எல்லோரையும்விட எல்லா விசயத்திலும்
உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.”
“இந்தியாவில் எல்லா
மாகாணங்களிலும் சமஸ்தானத்தில் எல்லாம் துறைகளிலும் அரசுப் பணிகளில் அனேகமாக
பிராமணர்களின் ஆதிக்கமே முற்றிலும் ஏகபோகமாக இருந்தது. அரசுப் பணிகளில் ஒரு
குறிப்பிட்ட சாதியினருக்கு வகுப்பினருக்கு - அதாவது பார்ப்பனர்களுக்கு - மட்டும் ஏக போகம்
இருக்கக்கூடாது என்ற தெளிவான குறிக்கோளின் அடிப்படையில் பிராமணரல்லாதவர்களின்
கட்சி தொடங்கப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - அதாவது அரசுப் பணிகளில் எல்லாச் சாதியினருக்கும் பிரதிநிதித்துவம்
- என்று அறியப்பட்ட கொள்கையை இக்கட்சி முன்வைத்தது. அதாவது குறைந்த
தகுதியுடையவர்களை அரசுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தும் போது பிராமண வகுப்பினர்களைவிட,
பிராமணர்கள் அல்லாதவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற கோட்பாடுதான் அது. இந்தக் கொள்கையில் எந்தவிதத்
தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட வகுப்பினரின் கைப்பிடியில் - அதாவது பார்ப்பனர்களின்
கைப்பிடியில் - அந்த வகுப்பினர் எவ்வளவுதான் புத்திசாலிகளாக
இருந்தாலும் ஒரு நாட்டின் நிர்வாகத்தையே கொடுப்பது சந்தேகத்துக்கிடமின்றி தவறு.”
“ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச்
சிறந்தது என்ற கருத்தைப் பிராமணர்கள் அல்லாதவர்கள் கட்சி கொண்டிருந்தது. இது
சட்டமன்றத்துக்கும் ஆட்சித் துறைக்கும் மட்டுமல்லாது நிர்வாக விசயங்களிலும்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிர்வாகத்தின் மூலமே, ஓர் அரசு மக்களுடன் நேரடித்
தொடர்பு கொள்கிறது. எந்த ஒரு அரசும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச்
செய்யமுடியாது. பிராமணர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால்
அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்பட முடியாது.”
“மற்ற பொதுமக்களைவிட தன்னை
மேன்மையாகக் கருதுபவன் ஒரு பிராமணன். மற்றவர்களை தாழ்ந்த சாதியினர், சூத்திரர்கள்
என இகழ்பவன். அவர்களுக்கு எதிராக செயல்பட்டு இயற்கையிலேயே தன் வகுப்பினர்களுக்குச்
சாதகமாக செயல்படுபவன். மக்களின் மீது அக்கறையில்லாததால் ஊழலுக்கு பலியாகிறவனாக
இருக்கும் இப்படிப்பட்ட ஒரு பிராமணன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க
முடியும்? மற்ற எந்த அன்னியர்களையும் போலவே அவனும்
இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே!”
“இதற்கு மாறாக சுத்த
சுயம்புவான திறமையே எல்லாம் என்ற நிலையைப் பிராமணர்கள் எடுக்கிறார்கள். கல்வியில்
அவர்கள் முன்னணியில் இருப்பதன் காரணத்தால் இந்தத் துருப்புச் சீட்டைத்தான்
வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். திறமை மட்டுமே
அளவுகோலாக இருந்தால் அரசுப் பணிகளை இந்த அளவுக்கு ஏகபோகமாக வைத்திருக்க
அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.”
”திறமைதான் எல்லாவற்றையும்
விட மிக முக்கியமானதென்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் அல்லர் துருக்கி
நாட்டவரையோ வேலைக்கு அமர்த்துவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.”
“நிர்வாகத்தில் எல்லா வகுப்பினரின்,
பிரிவினரின் கூட்டமைப்பும் இருந்தால்தான் அது ஒரு நல்ல நிர்வாகமாக அமையுமென்று
பிராமணரல்லாத கட்சியினர் எண்ணினர். நிர்வாகத்தில் பிராமண ஆதிக்கத்தை நீக்கும்
ஆர்வத்தில் இந்தக் கொள்கையை அமலுக்கு கொண்டுவருவதில் அரசுப்பணிகளில் பிராமணர்கள் மற்றும்
பிராமணர் அல்லாதவர்களிடையே ஒரு சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் குறைந்த அளவு
திறமை என்ற வரையறைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.”
கல்வியாளரும்,
அரசியல்வாதியும், சமூகச்சீர்திருத்தவாதியுமான டாக்டா் ஆர்.பி.பரஞ்சிபே அவர்கள் பம்பாய்,
சென்னை ராஜதானி மற்றும் மத்திய மகாணங்களில் ஆட்சிபுரிந்து வந்த பிராமணரல்லாத
கட்சிகள் பற்றி வெளியிட்டிருந்த ஒரு மிகச் சிறந்த நையாண்டிச் சித்திரத்தை மேற்கோள்
காட்டி மனுதர்மத்தின் வெட்கங்கெட்ட தன்மையையும், இழிவையும் அம்பலப்படுத்தி அதைத்
தலைகீழாக திருப்பிக் காட்டியிருக்கிறார் அம்பேத்கர்.
”பிராமணரல்லாதவர்கள் கட்சி
புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மனுஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத்
தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக்
கொடுத்தாரோ அந்த இடத்தை பிராமணர்களுக்குக் கொடுத்தார்கள்.”
”ஒருவன் பிராமணன்
என்பதற்காகவே மனு அவனுக்கு சலுகைகள் அளிக்கவில்லையா? சூத்திரர்கள் உரிமைகள் பெற
தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது, சூத்திரர்கள்
என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால் அதைப் பற்றி குறைகூற முடியுமா? அது
அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் இந்த விதிக்கு முன் உதாரணம் இல்லாமல் இல்லை. மனு ஸ்மிருதிதான்
அந்த உதாரணம். பிராமணரல்லாதவர் கட்சி மீது யார் கல்லெறிய முடியும்? பிராமணர்கள்
பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால், மனு ஸ்மிருதியை உயர்த்திப்
பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா? மனு
தர்மத்தின் ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு ஒரு சிறந்த சவுக்கடிதான் டாக்டர் பரஞ்சிபேவின்
கட்டுரை.”
”ஒரு சூத்திரனின் நிலையில் ஒரு
பிராமணனை வைத்தால் அவன் எப்படி அதை எதிர் கொள்வான் என்பதை இதைவிட எதுவும் படம்
பிடித்துக் காட்ட முடியாது.”
”இந்தக் கொள்கை பிராமணர்களைப்
பெருங்கோபத்திற்குள்ளாக்கியது. அவர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர்.”
(ஆதாரம்:
பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)
இந்த,
பிராமணரல்லாதவர்களின் கட்சிதான் பிறகு நீதிக் கட்சியானது. அதன்பிறகு தந்தை
பெரியார் தலைமையில் திராவிடர் கழகமானது. அதன் நீட்சியாக திராவிட முன்னேற்றக்
கழகமாக அண்ணா தலைமையில், பிறகு கருணாநிதி தலைமையில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.
இவர்கள் அனைவருமே – அதாவது திராவிடக் கட்சிகள் - பிராமணரல்லாதவர்களின் கட்சி
முன்வைத்த அரசு வேலைகளில் வகுப்புவாரி விகிதாச்சார முறையை நடைமுறைப்படுத்துவதில்
முனைப்பு காட்டி வந்தனர்.
அன்று
தொடங்கிய கடுங்கோபம் இன்னமும் தொடர்கிறது. எச்.ராஜா உள்ளிட்ட பார்ப்பனர்கள் ஏன்
பெரியாரை வன்மத்தோடு எதிர்க்கிறார்கள்? கருணாநிதியை ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள்?
திராவிட அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டும் என ஏன் கூப்பாடு போடுகிறார்கள் என்று
இப்பொழுது புரிகிறதா? திராவிடக் கட்சிகள் நாத்திகம் பேசுவதால்தான் – இந்து மதத்தைச்
சாடுவதால்தான் - இவர்கள் மீது பார்ப்பனர்களுக்கு கோபம் என்பதெல்லாம் ஒரு முகமூடிதான்.
இந்து மதத்தைச் சாடுவதால்தான் கோபம் என்றால் புத்தர் மீதல்லவா பார்ப்பனர்கள் கடுங்கோபம்
கொள்ள வேண்டும்.
அரசு வேலைகளில், பிராமணர்களிடத்தில்
சூத்திரர்களை வைத்ததால்தான் அவர்களுக்கு பெரியார் மீதும், கருணாநிதி மீதும்,
திராவிடக் கட்சிகள் மீதும் கடுங்கோபம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தொடர்புடைய பதிவுகள்:
நன்றி1
ReplyDeleteஅருமையான பதிவு. உண்மையில் மதம் பற்றிய கருத்துக்கான எதிர்ப்பென்றால் இவர்கள் புத்தரைத்தான் எதிர்க்க வேண்டும். அதனைத்தான் அரவணைத்துக் கொன்றொழித்து விட்டார்களே!! இப்பொழுதும் உயித்துடிப்புடன் இருக்கும் திராவிடத்தினை அழிக்கத்தான் இந்த வன்மம். அதனை நம் தோழர்கள் புரிந்து கொண்டால் நல்லது.
ReplyDeleteமுடிந்தவரை விரிவாக எடுத்துச் சென்று அனைவருக்கும் புரிய வைப்போம். நன்றி!
Delete