தீண்டாமையை
புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9
”இந்துக்கள்,
என்றைக்காவது ஒரு நாள் தீண்டப்படாதவர்களைத் தங்கள் சமுதாயத்தில்
இணைத்துக்கொள்வார்கள் என்பதை நம்புவது இயலாத காரியமாக உள்ளது. அவர்களது சாதி
அமைப்பு முறையும், மதக் கொள்கைகளும் இதைப் பற்றி எத்தகைய நம்பிக்கை கொள்வதையும்
முற்றிலும் தடுக்கின்றன. இருப்பினும், இந்து சமுதாயத்தில் தீண்டப்படாதவர்களை
தன்வயப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தீண்டப்படாதவர்களிடையே
உள்ளதைவிட இந்துக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது…. இந்தத் தன்வயமாக்கிக்
கொளன்ளும் பிரச்சனை பல நூற்றாண்டுகளுக்கு இழுத்தடிக்கும் ஒரு செயல்பாடாகவே
இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இதற்கிடையில்
இந்துக்களின், சமூக, அரசியல் ஆதிக்கத்தின் கீழ் திண்டப்படாதவர்கள் வாழ
வேண்டியிருக்கும். கடந்த காலத்தைப் போலவே இந்துக்களின் கொடுங்கொன்மைக்கும்,
அடக்குமுறைக்கும் அவர்கள் தொடர்ந்து வாழ வேண்டியிருக்கும்”
(ஆதாரம்:
பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)
தீண்டப்படாதவர்களை இந்துக்கள்
தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்கள் என்பதை நம்புவது இயலாத காரியம் என்பதைத்தான்
இன்றைய இந்தியச் சமூகம் மீண்டும் மீண்டும் நிரூபித்து
வருகிறது.
தீண்டப்படாதவர்கள்
மீது ஏவிவிடப்பட்ட சமீபத்திய சில கொடுங்கோன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம்.
தெலங்கானாவில் சொந்த நிலத்தை விட்டே விரட்டப்பட்ட தலித் குடும்பங்கள்!
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர்
மாவட்டத்தில் பத்தப்பள்ளி என்கிற கிராமம். ஐதராபாத்திலிரந்து சுமார் 170 கிமீ தூரத்தில்
உள்ளது. இங்கே ”போயர்” என்கிற ஆதிக்கச் சாதியைச்
சேர்ந்த 400 குடும்பங்களும் ”மடிகா” என்கிற
தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்த 40 குடும்பங்களும் வசிக்கின்றனர். மடிகாக்கள்
வாழும் பகுதி “மடிகா-வாடா‘ என்று அழைக்கப்படுகிறது.
மடிகா சாதியைச் சோந்த ரகுராம்
என்பவருக்கு 01.05.2015 அன்று திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தன்று கடவுளை
வழிபடுவது கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் விரும்புவதுதானே. அதன்படி உள்ளூர்
MLA G.சின்னரெட்டி தலையீட்டில் கோவிலுக்குள் செய்று ரகுராம் ‘சாமி தரிசனம்’
செய்கிறார்.
தலித்துகள் நுழைந்ததால் கோவில்
(impure) தீட்டுப்பட்டுவிட்டதாம். அதனால் கிருஷ்ணமாச்சாரி என்கிற பார்ப்பன அர்ச்சகன்
தீட்டுக்கழிப்பு யாகம் (purification yagna) நடத்தி உள்ளான். மே 4 ம் தேதி கோவில்
பூட்டப்பட்டுவிட்டது.
கோவில் பூட்டப்பட்டது குறித்து
புகார் தெரிவித்தபிறகு மண்டல வருவாய் அதிகாரி மற்றும் காவல் உதவி ஆய்வாளா்
அக்கிராமத்தை பார்வையிட்ட பிறகு பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிகாரிகள் சென்ற
பிறகு, போயா சாதியினரால் மீண்டும் கோவில் பூட்டப்பட்டது.
அதன் பிறகு அச்சிறு தலித்
சமுதாயத்தினர் முன்னேப்போதும் கண்டிராத அடக்கு முறைகளை எதிர் கொண்டனர்.
40000 லிட்டர் கொள்ளவு கொண்ட
நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து மடிகாக்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டது. அவர்கள்
தொடர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். மிரட்டப்பட்டனர்; ஏன் தாக்கவும்பட்டனர்.
மே 6 ந்தேதி அரசு அவர்களுக்கு
ஒதுக்கியிருந்த நிலத்திலிருந்து மடிகாக்கள் அடித்து விரட்டப்பட்டனர். பெட்ரோல்
குண்டுகளை வீசி குடிசை வீடுகளை எரித்து தரைமட்டமாக்கி உள்ளனர். அவர்கள் திரும்ப
வராமலிருக்க இறந்த பிணங்களை புதைத்து அந்நிலத்தை சுடுகாடாக மாற்றினர் ஆதிக்க போயர்
சாதியினர்.
நிலம் மடிகாக்களுக்கு சொந்தம்
எனப்பதற்கான ஆதாரம் இருந்த போதும் அரசு அதிகாரிகள் அதை ஆக்கிரமிப்பு என்றனர்.
”சாதி ஒழிப்பு கமிட்டி”
இப்பிரச்சனையை கையில் எடுத்து ஜீன் 23 அன்று மகபூப்நகர் மற்றும் பெப்பேர் ஆகிய
இடங்களில் மடிகாக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்திய பிறகுதான்
இப்பிரச்சனை வெளி உலகுக்குத் தெரிய வந்தது. பெப்பேரில் நடந்த உண்ணாநிலைப்
போராட்டத்தில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் தெல்தும்டேவும் பங்கேற்றிருக்கிறார்.
நீதி கேட்டுப் பேரணி!
06.08.2015 நன்பகலில் பெப்பேரில்
தொடங்கி பத்தப்பள்ளி நோக்கிய சில நூறு பேரோடு ஆரம்பித்த பேரணி, ஆயிரமாயிரமாயப்
பெருகி கோலாபூர் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தது. சுமார் 8 கிமீ வரை நீண்ட “பத்தப்பள்ளியை
நோக்கி!” (சலோ பத்தப்பள்ளி) என்ற இப்பேரணி மடிகாக்கள் மீது போயர்கள் நடத்திய வன்கொடுமைகளுக்கு
நீதி கேட்டு நடத்தப்பட்டது.
கோரக்பூர் ஐ.ஐ.டியைச் சேர்ந்த
பேராசிரியர் வினோத் குப்தா, ஐதராபாத் பல்கலைக்கழகத்தைச் சோந்த சுரபள்ளி சுஜாதா,
புரட்சிகர எழுத்தாளர்கள் பேராசிரியர் கே.ஒய் ரத்தினம், கே.லட்சுமி நாராயணா,
சதவாகனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.சுஜாதா மற்றும் அம்பேத்கரின் பேரன் ஆனந்த்
தெல்தும்டே உள்ளிட்ட அறிவுஜீவிகளும், சமூக ஆாவலர்களும் மாணவர்களும் திரளாக கலந்து
கொண்டு போயர் சாதியினரை ”எதிர்கொள்ளத் தயார்!” என்பதை பறைசாற்றி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மடிகாக்களுக்கு
கோலப்பூர் சாலையையொட்டி வீட்டு மனைப்பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகளுடன்
குடியிருப்புகளை கட்டித் தரவும், போயர்களுக்குத் துணைபோன அரசு அதிகாரிகள்மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் முன்வைக்கப்படன.
(செய்தி ஆதாரம்: THE HINDU:
20.07.2015 & 07.08.2015)
தொடர்புடைய பதிவகள்:
பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்?
தீண்டாமையை
புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
No comments:
Post a Comment