Sunday, August 16, 2015

விழுப்புரம் மாவட்டம், சேஷசமுத்திரத்தில் தீண்டாமையின் கோரதாண்டவம்!

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தையடுத்த, சேஷசமுத்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 2012ம் ஆண்டு இப்பிரச்சனை எழுந்த போது அரசு நிர்வாகம் இதை முடிவுக்குக் கொண்டு வரவில்லை.

இந்த ஆண்டு 17.08.2015 அன்று மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு தாங்கள் வசிக்கும் பகுதியில் தேர் ஒன்றை தாயார் செய்து வைத்திருந்தனர் தாழ்த்தப்பட்டவர்கள். மாரியம்மனுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் 
தேர்த்திருவிழா நடத்துவதா என வெறி கொண்ட ஆதிக்கச் சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களின் பகுதிக்குள் நுழைந்து அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததோடு தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளையும் எரித்து சாம்பலாக்கியுள்ளனர். 

இது ஏதோ ஒரு சிலர் செய்ததல்ல. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பெருங்கூட்டமே இதைச் செய்துள்ளது. 

இந்தியா பல்வேறு மத - இன - சாதி மக்களைக் கொண்ட நாடாம். வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நாடாம். அய்யங்கார் முதல் அப்துல் கலாம் வரை எல்லோரும் முழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

இவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மைதான்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீது தீண்டாமையை கடைபிடிப்பதில் உயர்சாதி இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள். இந்தியாவின் தென்கோடி முதல் வடமுனை வரையிலும், வங்கம் முதல் மும்பை வரையிலும் இந்த ஒற்றுமை ஒன்றுதான் நிலவுகிறது. 

வர்ணாசிரிம -  நால்வர்ண - மனுதர்ம - பார்ப்பன இந்து மத நம்பிக்கைகள், நடைமுறைகள் தொடரும் வரை இந்த ஒற்றுமை நீடிக்கவே செய்யும்.

இந்த ஒற்றுமையை சிதைப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டாலொழிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடிவேதுமில்லை.

எரிக்கப்பட்ட குடிசைகள்

பீதியில் பெண்கள்

அச்சத்தில் மக்கள்

கதறி அழும் பெண்கள்

12 comments:

  1. கடும் கண்டனத்திற்குறிய செயல். அனைத்து தமிழினத்தையும் தலை குனிய வைக்கும் சம்பவம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டனக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

      Delete
  2. வெட்கப்படவேண்டிய நிகழ்வு, சுரேந்திரன், குண்டூர்

    ReplyDelete
    Replies
    1. வெட்கப்பட வேண்டிய இத்தகைய கொடூரங்கள்தான் இந்தியாவில் அன்றாடம் நடந்தேறுகின்றன.

      Delete
  3. சாதி வெறியை முதலீடாக வைத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளவர்ககளின் சதி இது....................

    ReplyDelete
    Replies
    1. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.

      Delete
  4. தலைப்பை மார்த்தவும். சேஷசமுதிரம் கள்ளகுறிச்சியில் இருந்து 20 KM தள்ளி உள்ள கிராமம். இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டாம். சேஷசமுதிரம், விழுப்புரம் மாவட்டம் என்பது சரியான தலைப்பு.

    ReplyDelete
    Replies
    1. சேஷசமுத்திரம் கள்ளகுறிச்சியில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரம்தான். அதோ போல சங்கராபுரம் சுமார் 8 கி.மீ. தூரம். சேஷசமுத்திரத்தை குறிப்பிட வேண்டும் என்றால் அப்பகுதியில் நன்கு தெரிந்த ஊர் கள்ளக்குறிச்சி. மற்றொன்று சங்கராபுரம். இரண்டு ஊர்களையும் நான் அறிவேன். வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் கள்ளக்குறிச்சியை குறிப்பிட்டேன். எனினும் தற்போது தலைப்பை மாற்றியுள்ளேன்.

      Delete
  5. ஆதிக்கச் சாதி ஒற்றுமையை சிதைப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டாலொழிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடிவேதுமில்லை.

    ReplyDelete
  6. Even 1000s periyar, 1000000s ambedkar and 1000000s thirumavalavan cannot erase the untouchability in India. Because it has been deeply rooted in the blood/genes of Indian people. Only the way is to completely delete all caste names from records and usage for 2-3 generations. Then only it can be solved!

    ReplyDelete
    Replies
    1. ஆவணங்களில் சாதி வாழவில்லை. இந்து மத வாழ்க்கை முறையில் அது வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்து மத வாழ்க்கை முறையை ஒழித்துக் கட்டாமல் தீண்டாமைக்கு விடிவில்லை. அதற்கு பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும். மதம் சாராத கம்யூனிச வாழ்க்கை முறைக்கு மக்களை பயிற்றுவிக்க. முயலுவோம்! முடியாதது எதுவுமில்லை. நன்றி!

      Delete