Thursday, May 23, 2024

ரெண்டு தீனிப்பண்டாரங்கள யாருடா அதுல ஏறச் சொன்னது?

அண்மையில் சென்னை திருவொற்றியூர் பெருமாள் கோவில் கருட சேவையின் போது பல்லக்குக் ஒன்று கவிழ்ந்தது குறித்து,


"நீங்க கும்பிடுங்க, தூக்கிகிட்டு போங்க, ஆனால் அந்த ரெண்டு தீனிப்பண்டாரங்கள  யாருடா அதுல ஏறச் சொன்னது?"

என கேள்வி எழுப்பி, முகநூலில் வெளியான பதிவு ஒன்றை வாட்ஸ்அப் நண்பர்கள் குழு ஒன்றில் நான் பகர்ந்தபோது,

"மதம் சார்ந்த பதிவுகள் இங்கு வேண்டாமே" என எதிர்வினையாற்றியதோடு கிருத்தவ தேவாலயம் ஒன்றில் பல்லக்கு ஒன்று கவிழ்ந்ததைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பல்லக்கின் மேல் மனிதர்கள் இல்லை, சிலை மட்டுமே இருந்தது.


அதற்கு நான்,

"நான் பகிர்ந்த பதிவில் மனிதனை மனிதன் சுமக்கிறான். நீங்கள் பகிர்ந்த பதிவில் மனிதன் சிலையை சுமக்கிறான். இரண்டும் ஒன்றா? மனிதனை மனிதன் சுமப்பது அவமானம் என்று உங்களுக்கு உரைக்கவில்லையா?

மதம் சார்ந்த பதிவுகளே வேண்டாம் என்றால், மதத்தின் பெயரால் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தினாலும் அதை சகித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறீர்களா? சொரணையற்றவர்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். சக மனிதனை நேசிக்கும் எவராலும் அப்படி இருக்க முடியாது. 

வாழ்வியல் சார்ந்த எனது பதிவுகள் வரும் பொழுது மௌனம் காக்கிறீர்கள். ஆனால் மதத்தின் பேரால் நடத்தப்படும் இழிவுகள் தொடர்பான பதிவு பகிரப்படும்போது மட்டும் உங்களது எதிர் வினைகளில் வன்மம் வழிகிறது. தயவு செய்து என் பதிவுகள் மீதோ அல்லது நான் பகிரும் பதிவுகள் மீதோ கருத்து கூறத் தேவையில்லை. பிடிக்கவில்லை என்றால் கடந்து செல்லுங்கள். நானும் அப்படித்தான் உங்களது பதிவுகளையும் வேறு சில நண்பர்களுடைய பதிவுகளையும் கடந்து செல்கின்றேன். நன்றி! வணக்கம்!"

என எதிர்வினையாற்றினேன்.

அதற்கு அவர், கீழ்கண்ட படத்தைப் பகிர்ந்திருந்தார்.


இதற்கான எனது எதிர்வினை,

"இதில் சுமப்பவன், ஒன்று அடிமை புத்தி கொண்டவனாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஆதாயம் தேடுபவனாக இருக்க வேண்டும். இரண்டுமே ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. 

அடிமை புத்தி உள்ளவனும் ஆதாயம் தேடுபவனும் சொரணையற்றவர்கள் பட்டியலில், இதை ஆதரிப்போரும்தான்.

விழிப்புற்று வரும் தமிழ்நாட்டை இப்படிப்பட்ட பிரபலங்கள்தான் மீண்டும் இருளுக்குள் தள்ளுபவர்கள். சடங்குகள் சம்பிரதாயங்கள் மூலம் அடிமைத்தனத்தை விதைப்பதை சகித்துக் கொள்ளக் கூடாது என்பதே எனது நிலை."

சங்கி மன நிலையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம் தொடரும்!

ஊரான்

No comments:

Post a Comment