"மாதமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசுடா?." (135)
மாதவிடாய் இல்லையேல் இனவிருத்தி ஏது என்று கேட்பதோடு, பெண்களின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியைத் தீட்டாகக் கருதும் சமூகக் கண்ணோட்டத்தைச் சாடுகிறார் சிவவாக்கியர்.
சபரிமலைக்குப் பெண்கள் போகலாம் என சரியான முறையில் வழங்கப்பட்ட சபரிமலைத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என அங்கே கூச்சலிடுகின்றன; ஆனால், உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என இங்கே கூப்பாடு போடுகின்றன சங்கிகள்.
"நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அது என்பயன்?" (140)
ஆகமங்களையும் மந்திரங்களையும் எத்தனை நாள் ஓதினாலும் அதனால் என்ன பயன் என்று கேட்கிறார் சித்தர்.
"ஈணெருமையின் கழுத்தி இட்டபொட்ட ணங்கள்போல் மூணுநாலு சீலையில் முடிந்தவழ்க்கும் மூடர்காள்"....(151)
எருமையின் கழுத்தில் கட்டப்படும் பொட்டணங்கள் போல அர்த்தமற்ற சடங்குகளில் மூழ்கி, உண்மையான இறைவனை அறியாமல் அலையும் மக்களை சிவவாக்கியர் சாடுகிறார்.
"கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா" (184)
வாயால் மந்திரங்களைச் சொல்வதால் என்ன பயன் என்று கேட்கிறார் சிவவாக்கியர்
"பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்" (235)
செதுக்கப்பட்ட ஒரு கல்லை (சிலை) பழைய, புனிதப் பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்தச் சிலைக்குள் இறைவனைக் காண்பதாகக் கூறி, ஏமாந்து போகிறீர்கள் என்கிறார் இந்த சித்தர்.
"ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே." (242)
தேரில் ஒரு சிலையை வைத்து, அதை வடங்களைக் கட்டி இழுப்பது அதாவது தேரோட்டம் நடத்துவது
அறியாமையுள்ள மனிதர்கள் செய்யும் வீண் சலசலப்பு என்கிறார் சிவவாக்கியர்.
"பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே" (252)
இப்படி, பேய் பிசாசுகளை நம்பி பேய் ஓட்டும் மந்திரவாதிகளிடம் ஏமாறும் மக்களிடம் கேள்வி எழுப்புகிறார் இந்த சித்தர்.
"ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தக்கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தக்கல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?". (424)
வாசலில் போடும் கல்லை மிதித்துச் செல்கிறீர்கள், ஆனால் பூசை செய்யும் கல்லை மட்டும் பூ, நீர் வைத்து வணங்குகிறீர்கள். இதில் எந்தக் கல்லில் இறைவன் இருக்கிறான் என உருவ வழிபாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார் சிவவாக்கியர்.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
.jpeg)
No comments:
Post a Comment