இந்து மதத்தில் இருக்கின்ற அனைவருமே ஒரே மாதிரியான வாழ்வியல் முறையைக் கொண்டவர்களா? ஆன்மீக இந்துக்கள்கூட அன்றாட வாழ்வியல் நடைமுறையில் ஒரே மாதிரி இருப்பதில்லை.
இந்து மதத்தில் இருக்கின்ற கடவுள் மறுப்பாளர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் சட்டப்படி இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களது அன்றாட வாழ்வியல் முறையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
இவர்கள் அனைவரின் அன்றாட வாழ்வியல் முறையை சனாதனம் என்று கூற முடியுமா? முடியாது. மனு தரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை எவர் ஒருவர் கடைபிடிக்கிறாரோ, அவரை சனாதனவாதி என்று கூறலாம். அவர்கூட சிலவற்றில் மனுதரும சாஸ்திரத்தைப் கடைபிடிப்பவராகவும், சிலவற்றில் மீறுபவராகவும் இருப்பார்.
சனாதனத்தை எதிர்க்கும் ஆன்மீகவாதிகள்
இந்து மதத்தில் உள்ள பல ஆன்மீகவாதிகள், அவர்கள் தங்களது இந்துக் கடவுள்களை வணங்கிக் கொண்டே, சனாதனத்தை எதிர்க்கின்றனர். ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம், ஊடகவியலாளர் இராம.சுப்பிரமணியன், ஆன்மீகப் பற்றாளர் சத்தியவேல் முருகனார், அய்யா வைகுண்டரின் சீடர் பிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட எண்ணற்ற ஆன்மீகவாதிகள் உதயநிதி பேசியதில் தவறேதுமில்லை என்று தங்களது கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இதன் பொருள் என்ன? மனுதரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள, சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பெண்ணடிமை உள்ளிட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்குப் புறம்பான, வழிமுறைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதில்லை என்று பொருள்.
நஞ்சைக் கக்கும் சங்கிகள்
உண்மை இப்படி இருக்க, 80% இந்துக்களை இனப்படுகொலை செய்யச் சொல்லி, வன்முறையை தூண்டுகிறார் உதயநிதி என அவரது உரையை திரித்துப் புரட்டி, பாஜக, ஐடி பிரிவைச் சேர்ந்த அமித் மாலிக் தனது பொய்யுரையைத் தொடங்கி வைக்க, இவரைத் தொடர்ந்து சனாதன ஆதரவாளர்கள் பலரும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள், இராணுவ அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், சினிமாக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 சனாதன ஆதரவாளர்கள், உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
பியூஸ் ராய் என்ற ஒரு சாது உதயநிதியின் தலையைக் கொண்டு வந்தால் ரூ.10 கோடி தருவதாகக் கூறிய வன்முறைப் பேச்சைக் கண்டிக்காமல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பேராசிரியர் சீனிவாசன், எச்.ராஜா, நடிகை குஷ்பு உள்ளிட்ட தமிழ் நாடு பாஜக-வினர், தெலங்கானா-புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,
மேற்கு வங்க முதல்வர் மம்தா, அவரது கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி மற்றும் குணால் கோஷ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன் கெரா மற்றும் கரன்சிங், அதிமுக-வைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தனது சகாக்கள்,
சனாதனத்தை ஒழிக்க 2003 ஆம் ஆண்டு போர்ப் பிரகடனம் செய்த புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல்வாதிகளும்,
புஷ்பவனம் குப்புசாமி-அனிதா குப்புசாமி போன்ற சில பிரபலங்களும் உதயநிதியைக் கடுமையாகச் சாடுவதோடு சனாதனத்திற்கு புதுப்புது விளக்கங்களைத் கொடுத்து தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சனாதனக் காமெடிகள்
தனக்குக் கோவில் கட்டியதுதான் சனாதனம் என குஷ்பு விளக்கம் கொடுத்த போதே சனாதனத்தின் ஆதரவாளர்கள் தூக்கு மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, பொட்டு-பூ வைத்துக் கொள்வது, கோலம் போடுவது அதிலும் அரிசி மாவுக் கோலம் போடுவதுதான் சனாதனம் என அனிதா குப்புசாமி சொன்னபோதாவது சில சங்கிகள் குறைந்தபட்சம் நஞ்சையாவது குடித்திருக்க வேண்டும். மாறாக, உண்மையைப் பேசிய உதயநிதி மீது கொடும் நஞ்சைக் கக்கி வருகின்றனர்.
உண்மையில் எது சனாதனம் என்பதைத் தெரிந்து கொண்டால்தான், உதயநிதி பேசியது சரியா, தவறா என்பதை முடிவு செய்ய முடியும். அதற்கு, மனுதரும சாஸ்திரத்தையும், அதன் நடைமுறையையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது
எனவே, இனி மனுதரும சாஸ்திரம் குறித்தும், அதன் நடைமுறை குறித்தும் பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
சனாதன தருமத்தின் மூலம் எது?
சனாதன தருமத்தின் மூலம் எது?
No comments:
Post a Comment