'சனாதன தருமம் சமத்துவத்தை போதிக்கிறது, அதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை' என்று சப்பை கட்டு கட்டுகின்றனர் அதன் ஆதரவாளர்கள். இது உண்மையா?
சமத்துவமின்மையே சனாதன தருமத்தின் வேர்
சாஸ்திரப்படி தற்போது நடப்பது கலியுகம். கலியுகத்தில் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வருணங்கள் மட்டுமே இந்து மதத்தில் உண்டு. சத்திரிய, வைசிய வருணங்கள் கிடையாது. இவை தவிர அவர்ணர்கள் என்று சொல்லக்கூடிய தீண்டத்தகாத பிரிவினரும் இன்றைய இந்து மதத்தில் அடங்குவர்.
சனாதன தருமப்படி இந்து மதத்தில், தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பிராமணர்கள் கருதிக் கொள்கின்றனர். அடிமட்ட வேலை செய்தாலும், அன்றாடம் கஞ்சிக்கே அல்லாடினாலும் ஒரு பார்ப்பனனின் மனநிலை இதுதான்.
அதேபோல, சூத்திர சாதிகளில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பிள்ளைமார்களும், அதற்கு அடுத்து செட்டியார், நாயுடு, ரெட்டி, முதலியார், வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர், முத்தரையர், வண்ணார், நாவிதர், நாடார் என ஏணிப்படிகள் போல அமைக்கப்பட்டுள்ள சாதிகளில் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். தீண்டத்தகாத சாதிகளில் பள்ளர்கள் உயர்ந்தவர்களாகவும் அடுத்து பறையர்களும், அதற்கு அடுத்து சக்கிலியர்களும் என படிநிலையாக உயர்வு தாழ்வு பேணப்படுகிறது.
இத்தகைய உயர்வு தாழ்வு பார்ப்பது என்பது இவர்களிடம் தானாக வந்துவிடவில்லை. மாறாக பார்ப்பனர்களிடமிருந்தே இவர்கள் இதை கற்றுக் கொண்டனர். சமத்துவமின்மையே சனாதனத்தின் ஆணிவேர்.
உயர்ந்த இடத்தில் பார்ப்பனர்கள்
எந்தப் பிராணியும் பசுவை விட உயர்ந்தது கிடையாது, புழு பூச்சிகளை விட பசு உயர்ந்தது, பசுவை விட மனிதன் உயர்ந்தவன், மனிதர்களில் அந்தணர்கள் உயர்ந்தவர்கள், அந்தணரை விட பண்டிதர் உயர்ந்தவர், பண்டிதரைவிட ஞானிகள் உயர்ந்தவர்கள். (மனு 1: 96, 97).
அக்ரகாரத்தில் குடியிருக்கும் ஒரு சாதாரண பிராமணன் மற்ற இந்துக்களைவிட உயர்ந்தவனாவான். சாதாரண பிராமணனைவிட, வேதம் ஓதும் அர்ச்சகன் பண்டிதராக உயர்ந்து நிற்கிறான். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் சங்கராச்சாரியார், ஜீயர் போன்ற ஞானிகள் எல்லோரையும் விட உயர்ந்து நிற்கிறார்கள்.
சலுகை பெற்ற பார்ப்பனர்கள்
பார்ப்பனர்கள் மேலான தெய்வம் அல்லவா?; அதனால் இவர்கள் கெட்டவர்கள் ஆனாலும், பூஜிக்கத் தக்கவர்கள். (மனு 9: 316).
அதனால்தான் கருவறையில் சல்லாபம் செய்த காஞ்சி தேவநாதனும், அனுராதா ரமணனை சல்லாபத்திற்கு அழைத்த காஞ்சி நடுவாளும், சொர்ணாக்காவோடு பாண்டி விளையாடிய இளையவாளும் பூஜிக்கப்படுகிறார்கள்.
பார்ப்பனர்கள் பிறருக்குக் கெடுதல் செய்தாலும், அவர்களுக்கு நாம் திருப்பிக் கெடுதல் செய்யக்கூடாது (மனு 4: 162). அவர்கள் செய்யும் குற்றத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் (மனு 7-32).
சூத்திரர்களுக்கு எதிராக வஞ்சத்தைக் கொட்டும் எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும், பத்ரி சேஷாத்ரியையும், இன்ன பிற பார்ப்பனர்களையும் எதுவும் செய்ய முடிவதில்லையே? எதனால் என்று புரிகிறதா?
அதிகாரத்தில் பார்ப்பனர்கள்
மன்னராட்சிக் காலமானாலும், ஜனநாயகக் குடியரசுக் காலமானாலும் பார்ப்பனர்கள் தங்களுடைய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவே முயல்கின்றனர்.
பிராமணன் சொல்படிதான் ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். (மனு 7: 37), அவ்வாறு ஆட்சி நடத்துகிற போது தனக்கு நியாயம் என்று தெரிந்தாலும், அதை பிராமணனிடம் வணங்கிக் கேட்க வேண்டும். (மனு 7: 39). அவ்வாறு வணங்காததால் வேணன் யவணன் போன்ற மன்னர்கள் அழிந்து போனார்கள் (மனு 7: 40, 41); வணங்கியதால் பிருகு, விசுவாமித்திரன், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் வாழ்ந்தார்கள். (மனு 7: 42).
பார்ப்பனர்களை வணங்காததால்தான் அன்று கருணாநிதியை குடைந்தெடுத்தார்கள். இன்று ஆளுநர் ஆர்.என் ரவி சொல்வதைத் கேட்காததால் ஸ்டாலினைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சரவையில் வேதம் தெரிந்த மந்திரிகள், அதாவது நிதின் கட்கரி, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி, பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் போல குறைந்த பட்சம் ஏழு-எட்டு பார்ப்பனர்களை வைத்துக் கொள்ள வேண்டும். (மனு 7: 54). ஆட்சித் தலைவன் இவர்களிடம் அன்றாடம் ஆலோசனை கேட்க வேண்டும் (மனு 7: 59). மோடி இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பேருக்கு ஒரு பார்ப்பன எம்எல்ஏ கூட கிடையாது. இதில் மந்திரி சபைக்கு எங்கே போவது? தமிழ்நாடு இப்படி இருப்பதனால்தான் ஸ்டாலின் மீது பார்ப்பனர்கள் கடும் கோபத்தைக் கொட்டுகின்றனர்.
சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களை அயல்நாட்டுத் தூதர்களாக வைத்துக் கொண்டால் அது ஆட்சியாளருக்கு பெருமை சேர்க்கும் என்கிறது சனாதனம் (மனு 7: 63, 64).
இன்று இந்தியாவின் அயல்நாட்டுத் தூதர்கள் கிட்டத்தட்ட அனைவருமே பார்ப்பனர்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தத் தூதர்கள் மோடிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்தானே?
IIM, IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், ஆட்சி அதிகாரத்தின் கேந்திரமானத் துறைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
நாத்திகர்கள் பற்றி
சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பனர்கள் வாழக்கூடாது. (மனு 4: 61). சனாதன தருமப்படி பார்த்தால் பார்ப்பனர்கள்தான் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஆனால், அவர்கள் ஆட்சியில் உள்ள உதயநிதியை வெளியேறச் சொல்லுகிறார்கள்.
இதற்கும் சனாதன தருமத்தில் வழி வைத்திருக்கிறார்கள். வேதத்தை நம்பாதவனை மதிக்காதே என்கிறது சனாதனம். (மனு 4: 30). அதனால்தான் பெரியாரை, அண்ணாவை, கலைஞரை, உதயநிதியை அவர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள்.
கடவுளை நம்பாதவனை மட்டுமன்றி வேதத்தை நம்பாதவனும், நிந்திப்பவனும் நாத்திகன்தான். (மனு 2: 11). சனாதன தருமபப்படி, சத்தியவேல் முருகனாரும், பிரஜாபதி அடிகளாரும் நாத்திகர்கள்தான்.
*****
அடுத்து நீதித்துறையில் சனாதன தருமம் குறித்துப் பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment