வாழ்க்கைத் துணை தேட-கல்யாணம்-முதலிரவு,
குழந்தை பிறக்க-தொட்டிலில் போட-பெயர் சூட்ட, பள்ளியில் சேர்க்க-படிக்க-பணியில் சேர,
நிலம்-மனை வாங்க, உழவு செய்ய-பூமி பூஜை போட, கடன் வாங்க-தொழில் தொடங்க-கடை திறக்க, வாகனம் வாங்க-ஓட்ட,
சாவு-பிணம் தூக்க-கருமாதி-திதி கொடுக்க,
வீட்டை விட்டு வெளியே போக-வர
என எதற்கெடுத்தாலும்
நல்ல நாள்-கெட்ட நாள், வளர்பிறை-தேய்பிறை, ராகு காலம்-எமகண்டம்-குளிகை முதலாக ஜாதகம் மற்றும் கால நேரம் பார்ப்பது அதிகரித்து விட்டது.
மூக்குச் சளி சிந்த-மூத்திரம் பெய்ய-பிய் பேள என இவற்றிற்கும் கால நேரம் பார்க்கும் காலம் நெருங்குகிறதோ என அஞ்சும் வகையில் மக்களிடையே மூடநம்பிக்கைகள் மண்டிக் கிடக்கின்றன.
அறிவு எனும் பயிர்கள் வளர வேண்டிய மனம் (mind-a product of brain) எனும் மண்ணில் களைகளே மண்டிக் கிடந்தால் என்ன கிடைக்கும், குப்பையைக் தவிர?
பழைய பஞ்சாங்கங்களே தேவலாம் என்கிற அளவுக்குப் புதிய பஞ்சாங்கங்கள் பல்கிப் பெருகி விட்டன. அறியாமை நம்மை ஆட்கொண்ட பிறகு அறிவியல் வளர்ந்து என்ன பயன்?
குசு விடுவதற்கு இடம் பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கு. இல்லையேல் மானம் கப்பல் ஏறி விடும். ஆனால் இனி இதற்கும் நல்ல நேரம் பார்ப்பேன் என அடம் பிடித்தால், நீ நாறிப் போவதை யாரால்தான் தடுக்க முடியும்.
இதற்கெல்லாம் யாரை நொந்து கொள்ள? இவற்றையெல்லாம் ஒரு தொழிலாக உருவாக்கி,
தனது வருவாய்க்கு வழி வகுத்து,
அதை இன்றும் தொடர்கின்ற பார்ப்பனக் கூட்டத்தையா?
அல்லது
கண்டம் விட்டு கண்டம் தாவி,
மண் எடுக்கும் அறிவை வளர்த்துக் கொண்ட பிறகும்,
நான் மண்ணாங்கட்டியாய்தான் இருப்பேன் என்று
பார்ப்பனர்களின் கட்டுக்குள் சிக்குண்டு கிடக்கும் நம்மவர்களையா?
மது போதை மற்றும் மத போதையை விஞ்சும் இந்த ஜாதக போதையை ஒழிக்க ஏதேனும் வழி உண்டா?
சமூக நீதிக் கொள்கையில் பெரியாரை, அண்ணாவை, கலைஞரை பின்பற்றும் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசே!
எது வரினும் வரட்டும்!
தயவு தாட்சண்யம் பாராமல் ஜாதகம் ஜோதிடம் உள்ளிட்ட அனைத்து வகையான பஞ்சாங்க நடைமுறைகளையும் சிறப்புச் சட்டம் மூலமாக உடனடியாக தடை செய்! இல்லையேல் தமிழ்நாடு ஹத்ரஸ்களாக மாறுவதற்கு நீண்டகாலம் ஆகாது!
ஊரான்
விடாது கருப்பு என்று பேய் பிசாசுகளை கிராமங்களில் சொல்லுவது போல நம்மை இறந்த பின்னும் விடாது துரத்துகிறது சோதிடம்.சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இதற்கு மாஸ்டர் டிகிரி வரை நடத்துகிறார்கள்.
ReplyDeleteநன்றி
Delete