ஒரு மனிதன் இறந்த பிறகு உயிர் உடலை விட்டுப் பிரிந்தாலும் அவனது ஆத்மா ஆவியாக உலவிக்கோண்டுதான் இருக்குமாம். உயிரோடு இருந்த போது அவன் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்து அவனது ஆத்மாவை நரக லோகத்திற்கு அனுப்புவதா இல்லை சொர்க்க லோகத்திற்கு அனுப்புவதா என்பதை சித்திரகுப்தனை வைத்து தீர விசாரித்து எமதர்மன் தீர்ப்பு எழுதுவானாம்.
தீர்ப்பு எழுதிய பிறகு அந்த ஆத்மா சொர்க்கத்தை நோக்கியோ அல்லது நரகத்தை நோக்கியோ பயணிக்கும் போது பல்வேறு லோகங்களைக் கடந்து செல்ல வேண்டுமாம். அதற்குக் கால அவகாசம் பிடிக்குமாம். ஒரு மாதம் முடியும் போது ஆத்மாவிற்கு அகோரப்பசி எடுக்குமாம். பசியைப் போக்கிக் கொள்ள தனது வீட்டை நோக்கி திரும்பி ஓடிவருமாம். அப்பொழுது படையல் போட்டு சாப்பாடு தயாராக வைத்திருக்க வேண்டுமாம். அங்கே வரும் ஆத்மா சாப்பாட்டில் உள்ள சத்தை மட்டும் உறிஞ்சி வயிற்றை நிறப்பிக்கொண்டு மீண்டும் சொர்க்கத்தை நோக்கியோ அல்லது நரகத்தை நோக்கியோ பயணிக்குமாம்.ஒரு மாதம் கழித்து மீண்டும் வருமாம். மீண்டும் படையல், உணவை உறிஞ்சி வயிற்றை நிறப்புதல், மீண்டும் சொர்க்கத்தை நோக்கிய அல்லது நரகத்தை நோக்கியப் பயணம்….
இப்படியாக ஓர் ஆண்டு முடியும் போது பெரும் பசியோடு ஆத்மா வருமாம் அப்பொழுது பெரும் படையல் போட வேண்டுமாம்…இப்படி மாதந்தோறும் ஆண்டு தோறும் ஆத்மாவின் பசியை ஆற்ற போடப்படும் படையலுக்குப் பேர்தான் நீத்தாருக்குக் கொடுக்கும் திதியாம்.
80 வயதில் ஒரு தந்தை இறக்கும் பொழுது அவருடைய மகனின் வயது ஒரு 50 என்று எடுத்துக் கொண்டாலும் அதன் பிறகு அந்த மகன் தனது இறுதிக் காலம் வரை கிட்டத்தட்ட 80 வயது வரை அதாவது 30 ஆண்டுகளுக்கு இறந்த தனது தந்தைக்குத் திதி கொடுக்க வேண்டும். தந்தை இறக்கும் வயதைப் பொருத்து இந்தக் காலம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். இப்படி திதி கொடுப்பது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறதே ஒழிய அந்த ஆத்மாவானது சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைந்ததாகத் தெரியவில்லை.
இப்படியாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் ஆத்மாவின் வயிற்றை நிறப்புகிறேன் என்ற பெயரில் புரோகிதப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றை நிறப்பிக் கொள்கிறார்கள்.
திதி கொடுக்கும் அவசியத்தைப் பற்றி விளக்கும் ஒரு புரோகிதப் பார்ப்பானின் வீடியோ ஒன்றை முகநூலில் பார்த்துவிட்டு கீழ்கண்ட கருத்தைப் பதிவு செய்தேன்.
ராமு (புலனத்தில்): இதுபோன்ற நம்பிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதில் 100% உண்மை என்று தெரிந்தாலும் பெரியவர்கள் பயமுறுத்தி மீண்டும் மீண்டும் தொடர்கிறது.மாதாமாதம் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு செய்வது பார்ப்பனர்கள் மட்டுமே.முதல் வருடம் மட்டுமே பிற வகுப்பினர் திதி என்ற பெயரில் அதுவும் கிராமங்களில் ஆடம்பரமாக செய்கிறார்கள்.நகரங்களில் இது போல செய்வது மிகவும் குறைந்து விட்டது.நகரங்களில் மிக எளிமையாக செய்து மற்ற வேலைகளை தொடர்கிறார்கள்.
ReplyDeleteஇந்தப் பதிவை முகநூலில் பகிர்ந்த போது நீக்கி விட்டார்கள். இது குறித்து புலனத்தில் வந்த கருத்துக்கள்: கனகராஜ்: இதை நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஜாக்கிரதை. பார்ப்பனர்கள் பொல்லாத வர்கள். அவர்கள் நேரடி தாக்குதல் நடத்தாவிட்டாலும் மறைமுகத் தாக்குதல் செய்வார்கள். உலகம் அவர்கள் சொல்வதைத்தான் நம்பும். கருத்து நல்லதாக இருப்பினும் நாம் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது. ஏனெனில் வளர்த்த தம்பியான விபீஷணனே தன் அண்ணனான இராவணனை பிராமணீயத்திற்காக முதுகில் தாக்கி கொலை செய்தான்.
ReplyDeleteஜெய ராமகிருஷ்ணன் (புலனத்தில்): உயர் பதவிகளில் அவர்கள் தான் இருக்கிறார்கள் ஆனாலும் காலச்சக்கரம் சுழன்று கொண்டு தான் இருக்கிறது தற்போது மற்றவர்களும் கல்வி பயின்ற காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக உயர் பதவியில் இருக்கிறார்கள் (உதாரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்கள்) இன்னும் ஐம்பது ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம் நிகழும் ...
ReplyDeleteதர்மசிவம் (புலனத்தில்): முன்னோர்களை வழிபடும் வழக்கம் வேதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. 4 வேதங்களை படைத்தவர் இறைவன். இன்று வரை வேதங்களை எழுதியவர் யார் என்று யாருக்கும் தெரியாது. எனவே இதில் பிராமணர்களை குற்றம் சொல்வது தவறு. விருப்பமும் நம்பிக்கையும் இல்லாதவர்கள் முன்னோர்களை வழிபட தேவையில்லை.
ReplyDeleteமேலே குறிப்பிட்ட விஷயத்தில் இதுதான் என் கருத்து.
முன்னோர்களை வழிபடுவதும் வணங்குவதும் தவறு என்று நான் சொல்லவில்லையே. இறந்தவர்களுக்கு வீட்டிலேயே மரியாதை செய்து, மறைந்தவர்களுடைய அனுபவங்களை உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
Deleteதிதி கொடுப்பதற்காக சொல்லப்படும் கட்டுக்கதை தேவைதானா என்பதுதான் எனது கேள்வி.
பார்ப்பனர்களைக் கொண்டு திதி கொடுப்பது என்பது அவர்கள் வருவாய்க்காக உருவாக்கப்பட்ட ஒரு சடங்கு. திதி மட்டுமல்ல, இப்படி எண்ணற்ற சடங்கு சம்பிரதாயங்களை நம்மிடையே அவர்கள் புகுத்தி இருக்கிறார்கள்; அவ்வாறு புகுத்தப்பட்டவை நமது வாழ்க்கையில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டதனால் கைவிடுவதற்கு நமக்கு சிரமமாக இருக்கிறது.
புரோகிதர் இல்லாமல் நமது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கொள்வதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
தர்மசிவம்: சரியாகச் சொன்னீர்கள்
Deleteபழனிச்சாமி (புலனத்தில்): சற்றேறக்குறைய எல்லாம் பார்ப்பனர் மயமாகிவிட்ட நிலையில், இன்னும் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கப் போகிறோமோ என்ற கவலை மேலோங்குகிறது தோழர். பார்ப்பன ராஜ்ஜியம் ஒழிக்க மானமும் அறிவும் உள்ளோர் அனைவரும் ஓரணியில் திரள்வதும், திரண்டு மாற்றாக ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதும் காலத்தின் அவசியம் ஆகும்.
ReplyDelete