Wednesday, December 4, 2024

ஆங்கிலேயர் ஆட்சியில் இட ஒதுக்கீடு! - 4

அன்று வெள்ளைக்காரனுக்குச் சேவகம் செய்ய, படித்தவன் தேவைப்பட்ட போது, படித்த புரோகிதக் கூட்டம் அங்கே படையெடுக்க, எஞ்சியதற்கும் ஆட்கள் தேவை என்ற போதுதான் 'மெக்காலே'வால் படிப்பின் வாசம் 1835 இல் நம்மையும் தொட்டது. அது அந்நியனுக்கானத் தேவை என்றாலும், அதுவே உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கியது.

மகாத்மா ஜோதிராவ் புலே

ஆங்கிலேயர் ஆட்சியில், அரசுப் பதவிகளில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 
மைசூர் சமஸ்தானத்திலும் இதுதான் நிலைமை. 

இன்று மட்டும் என்ன வாழுது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது குறித்து பிறகு பார்ப்போம்

மராட்டியத்தைச் சேர்ந்த மகாத்மா ஜோதிராவ் புலேதான் இந்தியாவில் 1873 இல் "சத்ய சோதக் சமாஜம்" என்ற அமைப்பைத் தொடங்கி சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பபட மக்களுக்காகப் போராட முன்வந்த முதல் தலைவர். 

அப்பொழுது, SC / ST / OBC பட்டியல் எல்லாம் கிடையாதுசூத்திரர்ஆதி சூத்திரர் என இரு பகுப்புகள் மட்டுமே.
 
அரசுப் பதவிகளில் இந்தியர்களை அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை 1880 களில் 
இராஜாராம் மோகன் ராய் போன்றத் தலைவர்களால் முன்னெக்கப்பட்ட பிறகு, அதனால் பலனடைந்தவர்கள் பார்ப்பனர்களும், சில உயர்சாதியினரும் மட்டுமே.
 
தங்களுக்கும் அரசுப் பதவிகளில் பங்கு வேண்டும் என 
மைசூர் சமஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதோரின் கோரிக்கை வலுப்பெற்று, 1894-95 லேயே அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் அது தடைபட்டு, 1921 இல்தான் நடைமுறைக்கு வந்தது.
 
மகாராஷ்டிரம், கோல்காபூர் சமஸ்தான அரசர் சாகு மகாராசாதான் தன்னுடைய சமஸ்தான வேலைகளில், முதன் முதலாக இந்தியாவில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை 1902 இல் நடைமுறைப்படுத்தினார்.
 
அரசு வேலைகளில் எல்லாச் சாதியினரையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை, சென்னை மாகாணத்தில் 1850 களிலேயே முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள், இயக்கங்கள் தோன்றி வலியுறுத்தி வந்தன. 

சென்னை மாகாணம்

தென் இந்திய நல உரிமைச் சங்கம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகுமுதன்முதலாக சென்னை மாகாண அரசாங்க வேலைகளில் எல்லா வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு தந்து 19211922, 1924 ஆகிய ஆண்டுகளில் ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அவை பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் தடைபட்டு, 1927 இல்தான் நடைமுறைக்கு வந்தது.
 
தொடர்ந்து இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்ததால், பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெரிய அளவுக்குச் சரிந்தாலும் நாயர், மேனன், ஷெட்டிலிங்காயத்து, 
கம்மாரெட்டி, தொண்டை மண்டல முதலியார், கார்காத்த வேளாளர், கருணீகர் முதலான முன்னேறிய சாதியினரே அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தினர்.

இதனால், பிற்படுத்தப்பட்ட
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைக் கண்ட பெரியார், 1944 இல் லக்னோவில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில், விகிதாச்சார வகுப்புரிமை வேண்டும் என்று கோரியதோடு, பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி ஒதுக்கீடு பெறுவதில் தீவிரம் காட்டினார்.
 
இதை ஏற்று, 24.03.1947 இல் பிற்பட்ட வகுப்பினருக்கு ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் தலைமையிலான சென்னை மாகாண அரசு தனி இட ஒதுக்கீடு வழங்கியது

மத்திய அரசுப் பணிகளில் மாகாண எல்லைக்குள் இஸ்லாமியர், கிருஸ்தவர் உள்ளிட்ட 
சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு 1935 முதல் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. 

ஆனால், இந்திய விடுதலைக்குப் பிறகு இட ஒதுக்கீடு தொடர்ந்ததா? என்னவாயிற்று? அடுத்து பார்ப்போம்.
 
புலேவையும் பெரியாரையும் பிற்படுத்தப்பட்டோருக்கானத் தலைவர்களாக மட்டும் ஒரு சிலர் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால் இருவரும் இரு பிரிவு மக்களுக்குமானத் தலைவர்கள் என்பதை அவர்களின் போராட்ட வரலாறு நமக்கு உணர்த்துகிறது. 

தொடரும்
 
ஊரான்
 
நூல் ஆதாரம்: "மண்டல் குழு பரிந்துரை, மக்கள் நாயக உரிமைப் போர்! வகுப்புரிமை வரலாறு" வே.ஆனைமுத்து

தொடர்புடைய பதிவுகள்

ஆனைமுத்து எனும் அப்பழுக்கற்றப் போராளி!

இட ஒதுக்கீடு சிக்கல்களுக்கு வழிகாட்டும் தலைவன்!

எதிரிகளை மிரள வைத்த இட ஒதுக்கீடு வரலாறு! -3

No comments:

Post a Comment