வலைப்பூக்களின் வாசத்தை எனக்குத் தெரியப் படுத்தியது வினவு. வினவு படைப்புகளைப் படிக்கத் தொடங்கியபோது நான் ஒரு சாதாரண வாசகனாகத்தான் அறிமுகமானேன். ஏற்கனவே எனக்கு இரசிகப்பிரியா தமிழ் எழுத்துக்களை தட்டுவதற்கு அனுபவம் இருந்தாலும், வினவின் கட்டுரைகளின் மீதான விவாதங்களில் பங்கேற்க முடியாமல் இருந்தேன். ஒரு தோழரின் உதவியால் சந்தன முல்லை அவர்களின் " உலகின் அழகிய மணமக்கள்" கட்டுரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டேன். பிறகு தொடர்ந்து விவாதங்களில் பங்கேற்று வருகிறேன்.
விவாதங்களில் பின்னூட்டம் போடுவதன் மூலம் மட்டுமே சமூக நடப்புகள் குறித்த நமது எண்ணங்களை முழுமையாகப் பகிர்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேன். வாசகர்கள், வலைப்பூ தொடங்குவதற்கு வினவு வெளியிட்ட கட்டுரையின் வழிகாட்டுதலில் ஊரான் வலைப்பூவை கடந்த ஆண்டு (2010)அக்டோபரில் தொடங்கினேன். "விளையாட்டு இரசனைக்கானதா?" என்ற தபை்பில் எனது முதல் படைப்பை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து இதுவரை 50 படைப்புகளை வெளியிட்டுள்ளேன். இதில் ஒன்று மொழி பெயர்ப்புக் கட்டுரை, மற்றொன்று பதிவர் சரவணன் அவர்களின் படைப்பு.
இன்றைய தேதி வரை எனது வலைப்பூவை 46 பேர் பின்பற்றுகிறார்கள். இதில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு நேரடியாக அறிமுகம் இல்லாதவர்கள். கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் மட்டுமே அறிமுகமானவர்கள். இது தவிர இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் தொடர்ந்து ஊரானைப் படித்து வருகிறார்கள். தொடர்ந்து ஆதரவளித்தும் உற்சாகமூட்டியும் வருகிறார்கள். உறவால், நட்பால் ஏற்படும் பிணைப்பைவிட ஒத்த கருத்தால் ஏற்படும் பிணைப்பு தன்னலமற்றது, வலுவானது, உறுதியானது. நாம் எண்ணுகிற மாற்றத்திற்கு கருத்தொற்றுமை மிகவும் அவசிமானது. இத்தகைய கருத்தொற்றுமையை நோக்கி பயணிப்போம். பயணம் எல்லையற்றதுதான் என்றாலும் பயணம் தொடரும்.
இதுவரை ஊரானில் வெளியான படைப்புகள்:
தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?
எது தொழில் தர்மம்?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!
வணிகமயமாகும் நாட்டுப்புற கலைகள்!
எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!
வணிகமயமாகும் நாட்டுப்புற கலைகள்!
எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!
சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ...
சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா?
முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...
பாட்டுக் கச்சேரிகள் படுத்தும்பாடு!
எதார்த்தத்தை நோக்கி....
விளையாட்டு இரசனைக்கானதா?

மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteதோழரே,
ReplyDeleteஎப்பொழுதெல்லாம் வினவு தளத்தைத் திறந்து படித்து முடிக்கப்படுகிறதோ, அதற்கடுத்து ஊரான் தளமும் வில்லவன் தளமும் திறக்கப்பட்டுவிடும்.
சிற்சில கட்டுரைகளில் கருத்து ஒன்றாமை இருந்தாலும் உமது பெரும்பாலன கட்டுரைகளில் நான் கற்றுக்கொண்டவை அதிகம்.
பின்னூட்டங்களில் கருத்துப் பரிமாற்றமென்பது என்னைப் பொருத்தவரை மலையைத் தோண்டி எலியைப் பிடிப்பதாக அமைந்து விடுகிறது. (அச்சுக்கோர்ப்பதில் தடுமாற்றம்).
நேரடியான விவாதத்துக்காக உமை சந்திப்பதில் ஆவலாக உள்ளேன்!.
வாழ்த்துக்கள்!
தோழர் புதிய பாமரன்,
ReplyDeleteகருத்து ஒன்றாமை இருப்பது இயல்புதானே. "people not talk about the world, but about their perception" என்று ஒரு அறிஞன் சொன்னான்.
நீங்களும் நானும் ஒரே மாதிரி புரிந்து கொள்ள முடியாதுதான். புதிய சில விவரங்கள் கிடைக்கும் போது நமது புரிதலும் மாறுகிறது. அப்பொழுது கருத்து ஒன்றாமை நீங்குகிறது. ஆனாலும் வேறு ஒன்றில் ஒன்றாமை ஏற்படும். இது ஒரு தொடர் நிகழ்வு; போராட்ட்ம்.
உங்களுக்கு ஏற்படும் கருத்து ஒன்றாமையை தாராளமாக விவாதிக்கலாம். அதற்குத்தானே தளம் நடத்துகிறோம். வாய்ப்பு வரும் போது நேரில் சந்திப்போம். அதுவரை தளத்தில் கருத்துக்கள் முட்டி மோதட்டும்.
இத்தனை நாளா உங்க பதிவு அறிமுகம் ஆகல. இன்றுதான் பார்த்தேன்.படித்தேன். ஏற்றுக் கொண்டேன்
ReplyDelete